மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

புகாரளிக்க வந்தவரை அறைந்த எஸ்.ஐ.: பின்னணி என்ன?

புகாரளிக்க வந்தவரை அறைந்த எஸ்.ஐ.: பின்னணி என்ன?

விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் காவல் நிலையத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் மணிகண்டன் என்பவர் தனது மினி லாரியை மீட்டுத்தரும்படி புகாரளிக்க வந்துள்ளார். மணிகண்டன் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர். சின்ன சேலத்துக்கு வைக்கோல் லோடு ஏற்றிவந்த இவரது வண்டியை தியாகராஜன் என்ற விவசாயி கைப்பற்றி வைத்துள்ளதாகவும், அதை மீட்டுத் தரும்படியும் மணிகண்டன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் அடுத்த நாளே வண்டியைக் கைப்பற்றிய காவல் அதிகாரிகள் மணிகண்டனைத் தொலைபேசியில் பலமுறை தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். ஆனால் மணிகண்டன் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்று (ஜூன் 18) மீண்டும் காவல் நிலையம் வந்த மணிகண்டன் வாகனத்தை மீட்டுத் தரும்படி மீண்டும் புகாரளித்துள்ளார். மணிகண்டனிடம் அதிகாரி ஒருவர் புகார் கேட்டுக்கொண்டிருந்த போது எஸ்.ஐ. சண்முகம் அங்கே வந்துள்ளார். புகாரளிக்க வந்த மணிகண்டனைத் தகாத வார்த்தைகளில் பேசி கன்னத்தில் பாளாரென்று அறைந்துள்ளார் எஸ்.ஐ. சண்முகம்.

காவல் அதிகாரிகள் தியாகராஜனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவருக்குச் சாதமாகச் செயல்படுவதாக மணிகண்டன் கூறியதாலேயே எஸ்.ஐ. சண்முகம் மணிகண்டனிடம் கடுமையாக நடந்ததாகக் கூறப்படுகிறது. தியாகராஜனிடம் வைக்கோல் லோடு புரோக்கர் சுப்ரமணி வாங்கிய பணத்தை வசூலிப்பதற்காகவே மணிகண்டனின் வண்டியை தியாகராஜன் பிடித்துவைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

பிரேமலதா சமரசம் தோல்வி!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon