மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

மீண்டும் துரைமுருகனுக்கு என்னாச்சு?

மீண்டும் துரைமுருகனுக்கு என்னாச்சு?

உடல்நலக் குறைவு காரணமாக திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்றிரவு (ஜூன் 18) மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தண்ணீர் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியும், அதனை சமாளிப்பது தொடர்பாகவும் தனியார் ஊடகம் ஒன்றுக்கு முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் என்கிற முறையில் நேற்று பேட்டியளித்தார் திமுக பொருளாளர் துரைமுருகன். தொடர்ந்து கோட்டூர்புரம் வீட்டில் ஓய்வெடுத்த அவருக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் மிகவும் அவதியடைந்துள்ளார். இதனையடுத்து நேற்றிரவே அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் துரைமுருகன். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர்.

திமுகவின் சீனியர் தலைவர்களில் ஒருவரான துரைமுருகன், தனது மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்ட வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டதில் இருந்து ஒருவித கவலையுடனே இருந்துவந்துள்ளார். மேலும் கடந்த ஒரு மாதமாக அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டுவருகிறது. இதுதொடர்பாக நாம் துரைமுருகனுக்கு என்னாச்சு? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

துரைமுருகனின் தற்போதைய வயது 80 என்று குறிப்பிடப்பட்டாலும், அவரது உண்மையான வயது 83 இருக்கும் என்கிறார்கள். அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அந்த சமயத்தில் ஒருவித அச்சத்துடன் இருந்திருக்கிறார் துரைமுருகன். அதன்காரணமாகவே நேற்று காய்ச்சலுடன் சேர்ந்து வயிற்றுப்போக்கும் ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என்கிறார்கள் மருத்துவமனை வட்டாரங்களில்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

பிரேமலதா சமரசம் தோல்வி!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon