மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 ஜுன் 2019

உலகின் முதல் டிஸ்ப்ளே கேமராவை அறிமுகப்படுத்தும் ஓப்போ!

உலகின் முதல் டிஸ்ப்ளே கேமராவை அறிமுகப்படுத்தும் ஓப்போ!

உலகிலேயே முதல்முறையாக டிஸ்ப்ளேவிற்குள் பொருத்தப்பட்ட கேமரா தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை ஓப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 26ஆம் தேதியன்று சீனாவின் ஷாங்காய் நகரில் அறிமுகப்படுத்தப்படும் என்று சீன சமூக வலைதளமான வீபோவில் ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓப்போ வெளியிட்டுள்ள விளம்பரப் படத்தில், ஸ்மார்ட்போனின் திரைக்கு கீழ் கேமரா இருப்பது தெரிகிறது. இந்த படத்தில் கூடுதல் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனில் சாதாரண கேமரா, பாப் அப் கேமரா. ஃப்ளிப் கேமரா போன்றவை இருக்காது என்பது மட்டும் தெளிவாகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் மாதிரியை ஓப்போ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கமுடியாது. இம்மாதத்தின் தொடக்கத்தில் ஓப்போ நிறுவனத்தின் தலைவரான பிரையன் ஷென், டிஸ்ப்ளேவுக்கு கீழ் பொருத்தப்பட்ட கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் மாதிரி அடங்கிய வீடியோவை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

எனினும், டிஸ்ப்ளேவுக்கு அடியில் கேமரா தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்க ஓப்போ மட்டும் முயற்சிக்கவில்லை.இத்தொழில்நுட்பத்தை உருவாக்க ஷோமி நிறுவனம் ஏற்கெனவே முழுவீச்சில் செயல்பட்டு வந்தது. எம்ஐ 9 ஸ்மார்ட்போனில் இந்த தொழில்நுட்பம் கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக ஷோமி நிறுவனத்தின் தலைவரான லின் பின் ஏற்கெனவே ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் சாம்சங் நிறுவனமும் இதே தொழில்நுட்பத்தில் ஒரு ஸ்மார்ட்போனை உருவாக்க முயற்சித்து வருகிறது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?

பிரேமலதா சமரசம் தோல்வி!

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை! ...

3 நிமிட வாசிப்பு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை!

புதன் 19 ஜுன் 2019