மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 ஜுன் 2019

குற்றச்சாட்டுகளுக்கு சுந்தர் பிச்சை விளக்கம்!

குற்றச்சாட்டுகளுக்கு சுந்தர் பிச்சை விளக்கம்!

கூகுளின் கீழ் இயங்கி வரும் யூட்யூப் நிறுவனம் அண்மையில் தனது கொள்கைகளில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. மேலும், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்களை யூட்யூப் தளத்திலிருந்து நீக்கியுள்ளது. ஆபத்தான, வெறுப்புணர்ச்சி நிறைந்த வீடியோக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை யூட்யூப் நிர்வாகம் எடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய, வெறுப்புணர்ச்சி நிறைந்த மேலாதிக்கவாத வீடியோ பதிவுகளால் யூட்யூப் நிறைந்துள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வீடியோக்களை நீக்கவும், கட்டுப்படுத்தவும் யூட்யூப் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அவற்றை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.

இதுகுறித்து யூட்யூபின் தலைமை நிறுவனமான கூகுளின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை சிஎன்என் ஊடகத்திடம் பேசுகையில், “பிரச்சினையை சரிசெய்ய நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய தேவையை உணருகிறோம். வெறுப்புணர்ச்சி நிறைந்த வீடியோக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வாரம் எங்களது கொள்கைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

வெறுப்புணர்ச்சி நிறைந்த வீடியோக்களை கண்டறிந்து நீக்குவதற்கு போதிய ஊழியர்கள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, “ஊழியர்களையும், இயந்திரங்களையும் பயன்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். நாம் 99 விழுக்காடு சரிசெய்தாலும் கூடுதலாக வீடியோக்கள் வந்துகொண்டுதான் இருக்கும். வெறுப்புணர்ச்சி நிறைந்த வீடியோக்களை குறைத்து அவற்றின் விகிதத்தை ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக கொண்டுவருவதே எங்களது நோக்கம்.

உதாரணமாக கிரெடிட் கார்ட் மோசடிகளை எடுத்துகொள்ளுங்கள். எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் மேற்கொண்டு மோசடிகள் நடக்கும். விகிதங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?

பிரேமலதா சமரசம் தோல்வி!

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை! ...

3 நிமிட வாசிப்பு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை!

புதன் 19 ஜுன் 2019