மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

விமானப் பயணத்தை விரும்பும் இந்தியர்கள்!

விமானப் பயணத்தை விரும்பும் இந்தியர்கள்!

இந்த ஆண்டின் மே மாதத்தில் மொத்தம் 1.2 கோடி இந்தியர்கள் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டிருக்கின்றனர்.

மே மாதத்துக்கான விமானப் போக்குவரத்துச் சேவை குறித்த விவரங்களை சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2019 மே மாதத்தில் 2.9 சதவிகித உயர்வுடன் மொத்தம் 1.2 கோடிப் பேர் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். 2018 மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1.18 கோடியாக மட்டுமே இருந்தது. இந்த ஆண்டின் மே மாதத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை நிறுத்தியதால் விமானப் பயணிகளின் எண்ணிக்கையில் 4.5 சதவிகிதம் சரிவு ஏற்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்களையும் பணியாட்களையும் இதர விமான நிறுவனங்கள் வாங்கிக் கொண்டு தங்களது சேவையில் இணைத்தன. இதனால் மே மாதத்தில் விமானப் போக்குவரத்துச் சேவை மேம்பட்டுள்ளது. விமானப் பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில் 5.86 கோடிப் பேர் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். 2018ஆம் ஆண்டின் ஜனவரி - மே மாதங்களில் இந்த எண்ணிக்கை 5.71 கோடியாக மட்டுமே இருந்தது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் 49 சதவிகிதப் பங்குகளுடன் இண்டிகோ முதலிடத்தில் இருக்கிறது. கோடை விடுமுறை மற்றும் ஜெட் ஏர்வேஸ் சேவை நிறுத்தத்தால் விமானங்களின் எண்ணிக்கை குறைந்தது போன்ற காரணங்களால் விமான நிறுவனங்கள் அனைத்தும் பயணிகள் வருகையில் அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அதிகபட்சமாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனங்களின் 93.9 சதவிகித இருக்கைகள் நிரப்பப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்களின் பளுக்காரணி 85 சதவிகிதமாக இருந்துள்ளது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?

பிரேமலதா சமரசம் தோல்வி!


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon