மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

உள்ளாட்சித் தேர்தல் விவரங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

உள்ளாட்சித் தேர்தல் விவரங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தயார் செய்யப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விவரங்கள் உள்ளதா என்பதை வாக்காளர்கள் உறுதி செய்ய வழிவகை இல்லை. ஆனால் சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலின் போது வாக்காளர் பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிடுகிறது. எனவே உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியலை இணையத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும். அதுபோன்று வேட்பாளர்கள் தொடர்பான விவரங்களை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் விபரங்கள் ஆகியவற்றை மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று (ஜூன் 19) நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது எனது விளக்கமளிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் இவ்விவகாரம் தொடர்பாக ஜூலை 16ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யத் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்,


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?

பிரேமலதா சமரசம் தோல்வி!


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon