மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

சோப்பு நுரை ரிட்டர்ன்ஸ்: அப்டேட் குமாரு

சோப்பு நுரை ரிட்டர்ன்ஸ்: அப்டேட் குமாரு

எலெக்‌ஷன், ரிசல்ட், வேர்ல்ட் கப், தண்ணி தட்டுப்பாடு எல்லா அலப்பறைகளும் போகும் போது ஏதோ ஒண்ணு மிஸ் ஆகுதேன்னு தோணுச்சு. என்னன்னு பார்த்தா ஒரு நாலு மாசமா எந்த அறிவியல்பூர்வமான விஷயமும் நம்ம பஞ்சாயத்துக்கு வரல. அமைச்சர் பெரு மக்கள்லாம் எந்த கருத்தும் தெரிவிக்காததால எண்டர்டெய்ன்மெண்டே இல்லாம போச்சு. இப்ப தான் அணுக்கழிவுகளால எந்த பிரச்சினையும் இல்லன்னு ஒரு விஞ்ஞானி கிளம்பி வந்துருக்காரு. யாருப்பா இவருன்னு பார்த்தா ஆத்துல நுரை வந்ததுக்கு எல்லாரும் சோப்பு போட்டு குளிக்கிறாங்கன்னு சொன்னாரே அந்த மகான் தான். எப்படியும் இன்னைக்கு புல்லா வச்சு செய்வாங்கன்னு நினைக்கிறேன். அப்டேட்டை பாருங்க என்ன ஆனாருன்னு பார்த்துட்டு வாரேன். எதுக்கும் ப்ரே ஃபார் சோப்பு நுரை ஹேஸ் டேக்கை எடுத்து வைப்போம்.

கோழியின் கிறுக்கல்!!

அமைச்சர்கள் வீட்டிற்கு எந்த தடையுமின்றி தண்ணீர் கிடைப்பதால் தான் அவர்களுக்கு தண்ணீர் பஞ்சம் என்பது தெரியவில்லை போலும்!!

எனக்கொரு டவுட்டு

என்னதான் இப்போ டீஸர்,ட்ரைலர், படத்தோட அப்டேட்னு 12 மணிக்கு ரிலீஸ் பண்ணினாலும் அதுக்கு முன்னோடியா இருந்தது நம்ம அண்ணா யுனிவர்சிட்டி ரிசல்ட்தான்..!

mohanramko

ஊர்ல எல்லா மருத்துவரும் காஸ்ட்லியான மருந்தையே எடுத்துக்க சொல்றாங்க...

வெயிலுக்கு நிறைய தண்ணீர் குடிக்கணுமாம்.....

இதயவன்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் கருப்பணன் #

அப்ப ஒரு பத்து வருஷம் வந்து கூடங்குளத்துல வந்து இருந்துட்டு போங்க அமைச்சர்க்கு அணுஉலை பக்கத்தில ஒரு வீடு பார்சல்?!

மெத்த வீட்டான்

சீனாவையும் அமெரிக்காவையும் கிரிக்கெட்ல சேர்த்து எல்லா நாடும் ஜெயிச்சு ஜெயிச்சு விளையாடணும் !

அதிபன்

ஆஃப்லைன்ல இருக்கவன்கிட்ட கூட மெசேஜ் பண்ணி ரிப்ளை வாங்கிரலாம்,

ஆன்லைன்ல இருந்துக்கிட்டு ஆஃப்லைன்ல இருக்க மாதிரி நடிக்கிறவன் கிட்ட ரிப்ளை வாங்கவே முடியாது..

தட் தூங்குறவன எழுப்பலாம், தூங்குற மாதிரி நடிக்கிறவன எழுப்ப முடியாது

நெல்லை அண்ணாச்சி

எம்.ஜி.யார். வாழ்க...

ஜெயலலிதா வாழ்க..

வந்தே மாதரம்...

ஜெய்ஹிந்த்....

....தேனி காரர்...

தேர்தல் ஆணையம் வாழ்க...தானே சொல்லணும்...!!!

அபிவீரன்

நாடாளுமன்றத்தில் அதிமுகவின் ஒட்டுமொத்த குரலாக எனது குரல் நிச்சயம் இருக்கும்! - ஓ.பி.ரவீந்திரநாத்

ஏன் மிமிக்ரி பண்ண போறிங்கலா ஆபிசர்

செந்திலின்_கிறுக்கல்கள்

மளிகை சாமான் லிஸ்டுல பர்பூயூமுக்கு அதிக இடஒதுக்கீடு நடத்தி இருந்தா வீட்டுல தண்ணீர் வரலைனு அர்த்தம்!

பர்வீன் யூனுஸ்

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர் #

ராமதாசுக்கும் அன்புமணிக்குமா..?

mohanram.ko

'தலை சிறந்தவராக' உங்களை மாற்றுபவரை,

காத்திருந்து காணுங்கள் ....

சலூன் கடையில்....

செந்திலின்_கிறுக்கல்கள்

குடிநீர் தேவைக்காக தமிழகம் முழுவதும் ரூ. 675 கோடி மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறுகள்!- அமைச்சர் வேலுமணி# அடிச்சி விடுவோம் எவன் கேட்க போறான்?!

ஜோக்கர்...

மனைவி வந்த பிறகுதான் தெரிகிறது,

அம்மாவின் சமையலை எத்தனை சுதந்திரமாய் விமர்சித்தோம் என்று..!!!

சரண்யா

"நான் போறேன்'னு" சொல்லும் போது "போயிட்டு வா'னு" சொல்றவன் உயிர் நண்பன்

"போய் தொல'னு" சொல்லுறவன் உயிர வாங்குற நண்பன்

செந்திலின்_கிறுக்கல்கள்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் கருப்பணன் # ஹாலோ நம்புங்க நான் விஞ்ஞானி தான் பேசிறன்!

எனக்கொரு டவுட்டு

ஒரு வேளை ஹெச்.ராஜா ஜெயிச்சு இருந்தார்னா, பதவிப்பிரமாணம் செஞ்சு முடிச்சதும் எல்லாரும் "ஆண்டி இண்டியன்னு" சொல்லிருப்பாரோ.!

பர்வீன் யூனுஸ்

சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிக்கை வைக்கவில்லை - தினகரன் #

'ஷாப்பிங்' போகத் தான் கோரிக்கை வச்சீங்களா..?

மெத்த வீட்டான்

ஆந்திராவில் காவல்துறையினருக்கு வார விடுமுறை - செய்தி

ஏட்டய்யா லீவையும் இன்ஸ்பெக்டர் சேர்த்து எடுக்காமல் இருக்கணும் !

-லாக் ஆஃப்


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?

பிரேமலதா சமரசம் தோல்வி!


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon