மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

மீனவர்களுக்குப் பயிற்சியளிக்கும் மத்திய அரசு!

மீனவர்களுக்குப் பயிற்சியளிக்கும் மத்திய அரசு!

மீனவ மக்களை மாலுமிப் பணிக்குத் தயார்ப்படுத்தும் விதமாகத் திறன் பயிற்சி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் 7,300 கிலோ மீட்டர் தொலைவிலான கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காகக் கடலையே பெரிதும் சார்ந்துள்ளனர். மீன்பிடித் தொழில் வாயிலாகக் கிடைக்கும் வருவாய் மற்றும் கடல் உணவுகளைக் கொண்டே அவர்கள் பிழைப்பை நடத்துகின்றனர். அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் பொருட்டு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. உலகத் தரத்திலான மாலுமிகள் இந்தியாவில் மிகக் குறைந்த அளவில் மட்டுமே இருப்பதால் மீனவ சமூகத்தைச் சேர்ந்த மக்களை மாலுமிப் பணிக்குத் தயார்ப்படுத்தும் முனைப்பில் அரசு இத்திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது.

புதிய கப்பல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மன்சுக் லால் மாண்டவியா தனது முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று (ஜூன் 18) இதுகுறித்துப் பேசுகையில், “கடற்கரையைச் சார்ந்துள்ள மக்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்க நாங்கள் முடிவுசெய்துள்ளோம். இதனால் மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைக்கும். 10 முதல் 15 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்ட பிறகு அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதைக் கொண்டு அவர்கள் மாலுமிப் பணிக்குச் செல்லமுடியும். சர்வதேச அளவில் சுமார் 50 லட்சம் மாலுமிகளுக்கான தேவை இப்போது இருக்கிறது. இந்த வாய்ப்பை மீனவ மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 2 லட்சம் மாலுமிகள் மட்டுமே உள்ளனர். ஆனால், மிகச் சிறிய நாடான பிலிப்பைன்ஸில் கூட 8 லட்சம் மாலுமிகள் இருக்கின்றனர். கப்பல் கட்டுமானத் துறையிலும் அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிலும் அரசு கவனம் செலுத்துகிறது” என்றார்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?

பிரேமலதா சமரசம் தோல்வி!


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon