மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

ஜவாஹிருல்லா-ஹைதர் அலி: போட்டிப் பொதுக் குழு!

ஜவாஹிருல்லா-ஹைதர் அலி: போட்டிப் பொதுக் குழு!வெற்றிநடை போடும் தமிழகம்

வரும் ஜூன் 29ஆம் தேதி தமுமுக தலைமை பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஹைதர் அலிக்கும் கருத்து வேறுபாடு நிலவிவரும் சூழலில், சென்னையில் நேற்று பேட்டியளித்த ஹைதர் அலி, மக்களவைத் தேர்தலில் தினகரனுடன் கூட்டணி அமைக்க ஜவாஹிருல்லா பேச்சுவார்த்தை நடத்தினார் என்று தெரிவித்திருந்தார். மேலும், வரும் ஜூலை 13ஆம் தேதி தமுமுகவின் பொதுக் கூட்டம் நடைபெறவும் எனவும் அறிவித்தார்.

இந்த சூழலில் தமுமுக மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று (ஜூன் 19) சென்னையிலுள்ள அந்த அமைப்பின் தலைமை அலுவலகத்தில் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தண்ணீர் பிரச்சினை, முத்தலாக் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா, “விழுப்புரத்தில் நடந்த மமக-தமுமுக செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் ஜூன் 29 அன்று தமுமுக தலைமை பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளோம்” என்றார்.

ஹைதர் அலி உங்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளாரே என்ற கேள்விக்கு, “ஹைதர் அலி தவிர அனைத்து உறுப்பினர்களும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். உண்மைக்குப் புறம்பான பல்வேறு தகவல்களை அவர் நேற்று தெரிவித்திருக்கிறார். சில நிர்வாகிகளை நீக்கியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். தமமுகவின் அமைப்புச் சட்ட விதி தெளிவாகக் குறிப்பிடுகிறது. பொதுச் செயலாளர் என்பவர் தலைவருடைய உத்தரவின் அடிப்படையில் செயல்படுவார். செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுவதை பொறுத்தவரை தலைமை நிர்வாகக் குழுவின் ஆலோசனையில் அடிப்படையில் பொதுச் செயலாளர் செயல்பட வேண்டும் என்ற அதிகாரம் மட்டுமே அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று விளக்கம் அளித்தார்.

மேலும், ஹைதர் அலி கடந்த காலங்களில் தொடர்ந்து தன்னிச்சையாக செயல்பட்டுவந்திருக்கிறார் என்ற ஜவாஹிருல்லா, “அதுபோலவே நேற்றும் பேட்டியளித்துள்ளார். அவருடைய எந்தவொரு அறிவிப்பும் செல்லுபடியான அறிவிப்பு அல்ல. தமுமுகவிலுள்ள 52 மாவட்டங்களும் தலைமை நிர்வாகக் குழு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என கடிதம் மூலம் தெரிவித்துள்ளன. அதனடிப்படையில் ஜூன் 29ஆம் தேதி தலைமை பொதுக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஹைதர் அலியின் குற்றச்சாட்டுக்கு நான் வரிக்கு வரி பதிலளிக்கத் தேவையில்லை” என்றும் குறிப்பிட்டார். ஹைதர் அலி தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொதுக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?

பிரேமலதா சமரசம் தோல்வி!


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon