மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

முடிவுக்கு வரும் ‘விஜய் 63’!

முடிவுக்கு வரும் ‘விஜய் 63’!

விஜய் நடிக்கும் புதிய படம் பற்றிய அப்டேட்டுகளை கேட்டு ரசிகர்கள் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் டிவிட்டரில் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்த நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். தந்தை, மகன் என இரு கதாபாத்திரங்களில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் மகனாக வரும் விஜய் கதாபாத்திரத்துக்கு பிகில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கெனவே கூறப்பட்டது. இந்நிலையில் நயன்தாரா ஏஞ்சல் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தற்போது கூறப்படுகிறது. விஜய் நடிக்கும் 63ஆவது படமான இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

அதை உறுதிபடுத்தும் வகையில் அர்ச்சனா கல்பாத்தி ஜூன் 21ஆம் தேதி மாலை 5.59வரை மட்டுமே தளபதி 63 ஹேஸ்டேக்கை பயன்படுத்த வேண்டும் மாலை 6 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என கூறியுள்ளார். மேலும் விஜய்யின் பிறந்தநாள் அன்று ஜூன் 22ஆம் தேதி செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே இரு தினங்களில் விஜய் நடித்த சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றதோடு சர்ச்சையையும் உருவாக்கின. விஜய் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்த போஸ்டர் விமர்சனங்களை சந்தித்தது. அப்படியான சர்ச்சை இந்தப் படத்திலும் நிகழுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். இந்துஜா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட இளம் நடிகைகள் பலர் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடிக்க, யோகி பாபு, விவேக், கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?

பிரேமலதா சமரசம் தோல்வி!


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon