மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

பா.ரஞ்சித்தை கைது செய்யத் தடை!

பா.ரஞ்சித்தை கைது செய்யத் தடை!

இயக்குனர் பா.ரஞ்சித்தை நாளை மறுநாள் வரை கைது செய்யக்கூடாது என்று காவல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த 5ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார் ரஞ்சித். கடந்த 13ஆம் தேதி விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், ஜூன் 19ஆம் தேதி வரை ரஞ்சித்தை கைது செய்யமாட்டோம் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பாக இன்று (ஜூன் 19) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை நாளை மறுநாள் ஜூன் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை ரஞ்சித்தை கைது செய்யும் நடவடிக்கைகள் எதனையும் காவல் துறையினர் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டார்.

ரஞ்சித்தின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “ராஜராஜ சோழன் குறித்து சில புள்ளிகளை மட்டும் இணைத்து அந்த கருத்தை சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். ராஜராஜன் சோழனின் பல சாதனைகளை அவர் இல்லை என்று கூறவில்லை” என்று பதிலளித்துள்ளார்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?

பிரேமலதா சமரசம் தோல்வி!


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon