மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஜுன் 2019

பிக் பாஸ் டீமின் காமெடி கூட்டணி!

பிக் பாஸ் டீமின் காமெடி கூட்டணி!

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் டேனியல் இணைந்துள்ளார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களைப் பெற்றவர் ஹரிஷ் கல்யாண், தொடர்ந்து அவர், பிக் பாஸில் கலந்து கொண்ட மற்றொரு போட்டியாளரான ரைசாவுடன் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக அவர் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது அவர் ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். காமெடி ஜானரில் உருவாகிவரும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கிவருகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் ஹரீஷுடன் இணைந்து ரியா சக்கரவர்த்தி, ரெபா மோனிக்கா ஜான் என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியிட்ட டேனியலும் இணைந்துள்ளார். டேனியல் இந்த படத்தில் ஹரிஷின் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தை தயாரிக்கும் மலையாள தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ கோகுலம் மூவிஸ், பழசி ராஜா, காயங்குளம் கொச்சுன்னி போன்ற பல மலையாள வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதாநாயகியான ரெபா மோனிகா ஜான் விஜய் நடிக்கும் புதிய படத்திலும் நடித்துவருகிறார். ‘தனுசு ராசி நேயர்களே’திரைப்படம் குறித்து அவர் கூறுகையில் “ கதையைக் கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டேனியலும் படத்தில் இணைந்துள்ளார்.


மேலும் படிக்க

போயஸ் கார்டன்: சசிகலாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடிகள்!

டிஜிட்டல் திண்ணை: திமுக வேட்பாளர் விஷால்- தேர்தல் ரத்து பின்னணி!

விஜய் 63: கசிந்தது டைட்டில்!

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

பினாமியால் பிரச்சினையில் சிக்கும் விஷால்


வியாழன், 20 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon