மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 14 அக் 2019

சென்னை மெட்ரோ ரயில்களில் தொலையும் பணம்!

சென்னை மெட்ரோ ரயில்களில் தொலையும் பணம்!

மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரையில் ரூ.3.29 லட்சத்துக்கு மேலான பணம் பயணிகளின் தொலைந்துபோன ’மணி பர்ஸ்’களிலிருந்து கிடைத்துள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கட்டணம் அதிகமாக இருந்தாலும் மிக விரைவாகவும் வசதியாகவும் பயணிக்க முடிகிறது. மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மக்கள் தவறவிடும் உடைமைகள் மெட்ரோ நிர்வாகத்தால் கைப்பற்றப்பட்டு, பின்னர் முறையான விசாரணைக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட நபர்களிடம் திருப்பி வழங்கப்பட்டு வருகின்றன. 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதம் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரையில் மெட்ரோ ரயில்களில் பயணிகள் தவறவிட்ட மணி பர்ஸ்களில் ரூ.3.29 லட்சத்துக்கு மேல் கிடைத்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயிலில் பொருட்களைத் தொலைத்தவர்கள் மெட்ரோ ஸ்டேசன் அதிகாரிகளிடமோ அல்லது வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கோ தொடர்பு கொண்டால் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் அவர்களின் அடையாள சரிபார்ப்புக்குப் பின்னர் திரும்பி வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். இதுவரையில் மொத்தம் 3,858 பொருட்கள் இவ்வாறு திரும்பி வழங்கப்பட்டுள்ளன. அதாவது இதுவரையில் தொலைந்துபோன மொத்த பொருட்களில் 85 சதவிகிதம் அளவு கண்டுபிடிக்கப்பட்டுத் திரும்பி வழங்கப்பட்டுள்ளது.

மணி பர்ஸ்கள் மட்டுமல்லாமல் லேப்டாப், மொபைல் போன், டி.எஸ்.எல்.ஆர். கேமிரா, பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்ட பொருட்களும் பயணிகளால் மறந்து விட்டுச் செல்லப்படுகின்றன. ஒவ்வொரு மெட்ரோ நிலையத்திலும் தொலைந்துபோன பொருட்களுக்காகத் தனியாகவே பதிவுகள் வைக்கப்பட்டு அதில் பொருள் தொலைந்துபோன நேரம் உள்ளிட்ட விவரங்கள் பதிவிடப்படுகின்றன. பொருட்களுக்கான உரிமையாளரிடமிருந்து 48 மணி நேரத்துக்குள் புகார் எதுவும் வரைவில்லையென்றால் அப்பொருள் ஆலந்தூர் மெட்ரோ அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. தொலைந்துபோன நகைகள் மட்டும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்படுவதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க

தேர்தல் வராமலேயே ஆட்சி மாற்றம்: ஸ்டாலின்

சட்டமன்றம்; தயாராகும் எடப்பாடி

பிக் பாஸ் 3: ஷெரின் ஆர்மி ரெடி!

அதிமுகவுக்கு யெஸ், திமுகவுக்கு நோ சொன்ன தங்கம்

சோதனைக் காலத்தில் வந்த வாரிசு: விஜய பிரபாகரன்


திங்கள், 24 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon