மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு உருண்டை

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு உருண்டை

நெல் விளைவிக்கத் தேவையான தண்ணீரோ, உரமோ, பூச்சிக்கொல்லியோ கேழ்வரகுக்குத் தேவை இல்லை. உரமும் பூச்சிக்கொல்லியும் இல்லாததால், உருக்குலைக்காத உணவுச் செறிவைப் பெற்றிருப்பதுதான் கேழ்வரகின் சிறப்பு.

என்ன தேவை?

கேழ்வரகு மாவு - ஒரு கப்

பொடித்த வெல்லம் - அரை கப்

வேர்க்கடலை - கால் கப்

ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

கேழ்வரகு மாவில் சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்த்துப் பிசறி, ஆவியில் புட்டுபோல வேக வைக்கவும். வேர்க்கடலை, பொடித்த வெல்லம், ஏலக்காய்த் தூள் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து, அவித்த மாவில் சேர்த்துக் கலந்து, சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

என்ன பலன்?

பாலும் அரிசியும் உடம்பை வளர்க்கும்; கேழ்வரகோ, உடல் இளைக்க உதவும். எல்லோருக்கும் ஏற்ற தானியம். வளரும் குழந்தைகளுக்கும், மாதவிடாய் கால மகளிருக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் மிக மிக அவசியமான உணவு கேழ்வரகு.

நேற்றைய ரெசிப்பி: கேழ்வரகு இட்லி

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5


புதன், 10 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது