மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

அனுபவம் என்பது என்ன?

அனுபவம் என்பது என்ன?

ஒரு கப் காபி: ஜே.கிருஷ்ணமூர்த்தி சிந்தனைகள்

அனுபவம் என்பது வேறு. அனுபவித்தல் என்பது வேறு. நமது அனுபவங்கள் புதிதாக அனுபவிப்பதைத் தடை செய்கின்றன. மோசமான அனுபவம் அல்லது இனிதான அனுபவம் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை. இரண்டுமே இடையூறுதான்.

அனுபவம் என்பது காலத்தின் பிடியில் உள்ளது. அனுபவம் முடிந்து போனது. அது இறந்த காலம். நிகழ்காலத்திற்கேற்ப இது உயிர் பெறுகிறது. வாழ்க்கை என்பது நிகழ்காலத்தில் நிகழ்வது. இது அனுபவம் அல்ல.

அனுபவத்தின் நிழல் நிகழ்காலத்தில் விழுவதால், அனுபவித்தல் என்பது முழுமையாக இல்லாமல் அனுபவம் ஆகிறது.

அனுபவங்களால் ஆனதுதான் மனம். எனவே, இது எதையும் அனுபவிக்க முடியாது. தொடர்ச்சி எதுவும் இல்லாமல் ஒரு விஷயத்தைப் புதிதாகப் பார்க்கும் தன்மை மனதுக்கு இல்லை. அனுபவம் இல்லாத இடத்தில்தான் அனுபவித்தல் நிகழும்.

மனம் தனக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றைக் கற்பனை செய்து அதைத்தான் பார்க்கும். மனம் செயல்படுபவதை நிறுத்தினால்தான் தெரியாத ஒன்றைப் பார்க்க முடியும்.

அனுபவத்தின் வெளிப்பாடுதான் சிந்தனை. இது நினைவு சார்ந்தது. சிந்தனை இருக்கும்வரை அனுபவித்தல் இருக்காது.

சரி, அனுபவத்தை எப்படித் துறப்பது? இப்படி துறக்க நினைப்பதே துறக்க முடியாமல் செய்துவிடும்.

துறக்க வேண்டும் என்பது ஓர் ஆசைதான். ஆசையற்ற அமைதியான நிலையே அனுபவித்தலுக்கு அவசியம். ஆனால், மனம் அந்த நிலையை அடைய பேராசைப்படுகிறது. தான் அனுபவித்ததை அனுபவமாக மாற்றப் பார்க்கிறது. எனவே அனுபவம், அதை அனுபவித்தவர் என்ற இருமை நிலை தோன்றுகிறது.

ஒன்றை முழுமையாக அனுபவிக்கும்போது அங்கு அனுபவிப்பனோ, அனுபவிக்கப்படும் பொருளோ இருக்காது. அனுபவித்தல் மட்டுமே நிகழும். நான் அனுபவிக்கிறேன் என்ற எண்ணம் இருக்காது. சிந்தனை இல்லாமல் மனம் அமைதியாக இருக்கும்.

ஒரு விண்மீனைப் பார்த்தால், அதன் அழகை முழுதும் ரசிப்போம். நான் அதை ரசிக்கிறேன் என்ற எண்ணம் இல்லாத நிலையில் அனுபவம், அனுபவிப்பவன் என்ற இருமை இல்லை.

இந்த நிலையை அடைய எந்த வழிமுறையும் இல்லை. முயற்சி செய்து அடையவும் முடியாது.

நான் என்ற எண்ணம் மறையும்போதுதான் காலம் கடந்த அமைதியை அடைய முடியும்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon