மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

ராகுல் காந்திக்கு முதல் வரிசை கேட்கவில்லை!

ராகுல் காந்திக்கு முதல் வரிசை கேட்கவில்லை!

மக்களவையில் ராகுல் காந்திக்கு முதல் வரிசையில் இடம் கேட்கவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பக்கம் முதல் வரிசையில் ராகுல் காந்திக்கு இடம் வழங்கப்படாது எனவும், இரண்டாம் வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகின. முதல் வரிசையில் காங்கிரஸுக்கு இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், திமுக உட்பட மற்ற எதிர்க்கட்சிகளுக்கு தலா ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுதரிக்கும் இரண்டு இருக்கைகள், திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுக்கும் முதல் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ராகுல் காந்திக்கு முன்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் எந்தவித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்று காங்கிரஸ் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதிர் ரஞ்சன் சவுதரி தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகுல் காந்திக்கு மக்களவையில் முன்வரிசை வழங்க வேண்டுமென்று ராகுல் காந்தியோ, காங்கிரஸ் கட்சியோ எந்தக் கோரிக்கையும் முன்வைக்கவில்லை. ராகுல் காந்திக்கு இருக்கை எண் 466ஐ ஒதுக்க வேண்டுமென்று நாங்கள் முன்மொழிந்துள்ளோம். போலிப் பிரச்சாரங்களைத் தவிர்க்கவும்” என்று தெரிவித்துள்ளார்.

முந்தைய மக்களவையிலும் ராகுல் காந்திக்கு இரண்டாம் வரிசையில்தான் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. மக்களவையில் கட்சியின் பலத்தின் அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. அரசு பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் இருக்கை ஒதுக்கப்படும். அவருக்கு அடுத்தடுத்த இருக்கைகளில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்த கவுடா ஆகியோர் அமர்வார்கள்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon