மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

சூர்யா படத்தைக் கைப்பற்றிய சன் டி.வி!

சூர்யா படத்தைக் கைப்பற்றிய சன் டி.வி!

சூர்யாவின் காப்பான் பட சேட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.

அயன், மாற்றான் படங்களைத் தொடர்ந்து சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் காப்பான். இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து முக்கியக் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருக்கிறார். மேலும் ஆர்யா, சாயிஷா, பூர்ணா, பொமன் இரானி, சமுத்திரக்கனி என பலர் இணைந்து காப்பானில் பணியாற்றி இருக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. தெலுங்கில் பந்தோபஸ்த் என்ற பெயரில் காப்பான் வெளியாகவுள்ளது. சில நாட்களுக்கு முன் தெலுங்கில் காப்பான் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. கடந்த ஜூலை 5 அன்று வெளியான இந்தப் படத்தின் சிறுக்கி என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பின் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளியாகும் பாடல் இது.

இந்த நிலையில், அரசியல் கலந்த த்ரில்லராக வெளியாகும் காப்பான் படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. இதை அதிகாரபூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சன் டிவி ‘சூர்யாவின் காப்பான் சேட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது’ எனப் பதிவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 31ஆம் தேதி காப்பான் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon