மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

இந்தியாவுக்கு அல் கய்தா எச்சரிக்கை!

இந்தியாவுக்கு அல் கய்தா எச்சரிக்கை!

அல் கய்தா அமைப்பின் பத்திரிகையில் அதன் தலைவர் அய்மான் அல் ஜவகிரி எழுதியுள்ள கடிதத்தில், காஷ்மீரில் உள்ள முஜாகிதீன்கள் இந்திய ராணுவம் மீதும் இந்திய அரசு மீதும் இடைவிடாத தாக்குதல்களை நடத்த வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்.

“காஷ்மீரை மறந்துவிடாதீர்கள்” என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கடிதத்தில், காஷ்மீரில் எல்லைப் பகுதியில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் பாகிஸ்தானின் பங்கு குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்திய ராணுவத்தின் மீதும் அரசின் மீதும் தொடர்ந்து இடையறா தாக்குதல்களை மேற்கொள்ள காஷ்மீரில் உள்ள முஜாகிதீன்கள் முழு மனதோடு கவனம் செலுத்த வேண்டும் என கருதுகிறேன். அதனால் இந்தியப் பொருளாதாரத்துக்குச் சேதம் விளைவித்து இந்தியாவுக்கு மனிதவளத்திலும், ராணுவ உபகரணங்களிலும் வெகுவான இழப்பை ஏற்படுத்த முடியும்.

பாகிஸ்தான் ராணுவமும் அரசும் அமெரிக்காவின் ஆட்களாகச் செயல்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யாவை வெளியேற்றிய பிறகு அரபு முஜாகிதீன்களை காஷ்மீருக்குள் நுழையவிடாமல் பாகிஸ்தான் தடுத்துவிட்டது. அரசியல் ஆதாயத்திற்காக முஜாகிதீன்களை பாகிஸ்தான் ராணுவமும் அரசும் பயன்படுத்திவிட்டு அவர்களைப் பின்னர் அழித்து விடுகின்றன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் என்பது அமெரிக்கா நிர்வகிக்கும் எல்லையில் நடைபெறும் மதச்சார்பற்ற போட்டி மட்டுமே.

காஷ்மீரின் சண்டை என்பது தனிப்பட்ட மோதல் அல்ல, காஷ்மீர் விவகாரம் ஒட்டுமொத்த உலகிலும் வாழும் இஸ்லாமிய சமூக ஜிஹாதின் ஓர் அங்கமாகும். காஷ்மீர், பிலிப்பைன்ஸ், செச்சினியா, மத்திய ஆசியா, ஈராக், சிரியா, அரபு தீபகற்பம், சோமாலியா, துர்கிஸ்தான் ஆகிய இடங்களில் ஜிஹாதை ஆதரிப்பது அனைத்து இஸ்லாமியர்களின் தனிப்பட்ட கடமை என்பதை அறிஞர்கள் வலியுறுத்த வேண்டும். மேலும் மசூதிகள், சந்தைகள் என இஸ்லாமியர்கள் கூடும் இடங்களில் நமது ஆட்கள் தாக்குதல் நடத்தக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

அஜித் சம்பளம் 100 கோடியா?


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon