மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 13 நவ 2019

இவன் காதலின் ‘காம்ரேட்’!

இவன் காதலின் ‘காம்ரேட்’!

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா நடிப்பில் உருவான டியர் காம்ரேட் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

கீதா கோவிந்தம் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா நடிப்பில் உருவான படம் டியர் காம்ரேட். அதனாலேயே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் வெளியான இதன் டிரெய்லரும், சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஒரே டேக்கில் உருவான ‘கேண்டீன் சாங்’கும் நல்ல வரவேற்ப்பை பெற்றன.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று காலை வெளியாகியுள்ளது. கல்லூரி நாட்களில் கோபம் கொண்ட கம்யூனிச சிந்தனைக் கொண்ட இளைஞனாக விஜய் தேவரகொண்டா, மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீராங்கனையான ராஷ்மிகா மீது காதல் வயப்படுகிறார். புரட்சி, காதல், ஆக்‌ஷன், தோல்வி, பயணம் பல பரிமாணங்களில் மிளிர்கிறது டியர் காம்ரேட்.

பரத் கம்மா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ், பிக் பென் சினிமாஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

டியர் காம்ரேட் டிரெய்லர்

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

அஜித் சம்பளம் 100 கோடியா?


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon