மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

90’ஸ் கிட்ஸை குறி வைக்கும் டிஸ்னி!

90’ஸ் கிட்ஸை குறி வைக்கும் டிஸ்னி!

தொடர்ந்து 90களில் வெளியான கிளாசிக் அனிமேஷன் படங்களை மறு உருகாக்கம் செய்யும் டிஸ்னி, தன் அடுத்த வரவாக முலான் பட டிரெய்லரை வெளியிட்டுள்ளது.

சீனாவின் ஏகாதிபத்திய இராணுவத்தில் நோய்வாய்ப்பட்ட தனது தந்தைக்கு பதிலாக போராட ஒரு ஆணாக மாறுவேடமிட்டு போர்புரிந்த புகழ்பெற்ற பெண்ணான ஹுவா முலான் கதையை அடிப்படையாகக் கொண்ட படமே முலான்.

1998ஆம் ஆண்டு டிஸ்னி தயாரிப்பில் மியூசிக்கல் டிராமாவாக வெளியான இந்த அனிமேஷன் படம் பல்வேறு விருதுகளைப் பெற்றது. அப்படத்தை தற்போது லைவ்-ஆக்‌ஷனாக உருவாக்கியிருக்கிறது டிஸ்னி. சீனாவின் மார்க்கெட்டை மேலும் பலப்படுத்த டிஸ்னியின் அதிரடித் திட்டமிது என்ற கருத்துக்களும் பரவலாக இருக்கின்றன.

தொடர்ந்து 90களில் வெளியான கிளாசிக் அனிமேஷன் படங்களான பியூட்டி அன் த பீஸ்ட், சின்ட்ரெல்லா, அலாதீன், வெளியாகவிருக்கும் தி லயன் கிங் படங்களைத் தொடர்ந்து முலான் திரைப்படமும் இவ்வரிசையில் இணைந்துள்ளது. பழைய ரசிகர்களை தக்க வைக்கும், புதிய ரசிகர்களை உருவாக்கவும் அதிரடியாக களமிறங்கியிருக்குறிது டிஸ்னி ஸ்டூடியோஸ்.

2020ஆம் ஆண்டு வெளியாகவிருக்கும் முலான் படத்தை நிக்கி கரோ இயக்குகிறார். யிஃபி லியூ முலானாக நடித்துள்ளார். பிரம்மாண்டமாக உருவான இதன் டிரெய்லர் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.

முலான் டிரெய்லர்

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

அஜித் சம்பளம் 100 கோடியா?


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon