மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

விமான நிலையத்தில் பயணிகள் தூங்கலாமா?

விமான நிலையத்தில் பயணிகள் தூங்கலாமா?

பொதுவாகப் பேருந்து நிலையங்களிலோ ரயில் நிலையங்களிலோ பயணத்துக்குத் தாமதம் ஆனாலோ அல்லது வண்டிகள் வர இன்னும் அதிக நேரம் இருந்தாலோ பயணிகள் அங்கேயே தூங்கி ஓய்வெடுப்பது வழக்கம். இதற்கு எவ்விதத் தடையோ கட்டுப்பாடோ விதிக்கப்படுவதில்லை. ஆனால் விமான நிலையங்களில் இதற்கு அனுமதி உண்டா?

இரண்டு நாட்களுக்கு முன்னர் கோவா விமான நிலையத்தில் பயணிகள் சிலர் விமானப் புறப்பாடு பகுதிக்கு அருகில் கீழே படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. இவ்வாறு பயணிகள் தூங்க அனுமதிக்கக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரயில் நிலையங்களைப் போல விமான நிலையங்களிலும் இதுபோல பயணிகள் தூங்கக்கூடாது என்று தூங்கிக்கொண்டிருந்த பயணிகளைப் பாதுகாப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர். கோவா முற்போக்குக் கட்சியின் துணைத் தலைவரான துர்காதாஸ் கமாத், “இதுபோன்ற கீழ்த்தரமான சுற்றுலாப் பயணிகளைக் கோவாவில் அனுமதிக்கலாமா? விமான நிலையம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ட்வீட் செய்திருந்தார். இது விமர்சனத்துக்கு உள்ளாகியது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்திலும் தூங்கிக்கொண்டிருந்த பயணிகளுக்கு தூங்கக்கூடாது என்று பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பயணிகளுக்கான நாற்காலியில் அமர்ந்தபடி தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் தூங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக விமான நிலைய மேலாளர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விமானங்களுக்காகக் காத்திருக்கும் பயணிகள் ஓய்வெடுக்கவும் விமானங்கள் தாமதமானால் பயணிகள் அதுவரையில் காத்திருக்கவும் போதிய தங்கும் வசதி ஏற்படுத்தித் தந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்காது.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

அஜித் சம்பளம் 100 கோடியா?


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon