மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

அதிமுகவும் உலகக் கோப்பையும்: அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவும் உலகக் கோப்பையும்: அமைச்சர் ஜெயக்குமார்

உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததை அதிமுகவுடன் ஒப்பிட்டு கருத்து கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனால் இந்திய அணிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பேசப்படுகின்றன.

இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இன்று (ஜூலை 11) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், இந்தியா தோல்வியடைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நிச்சயமாக நான் மட்டும் உலகக் கோப்பையில் விளையாடி இருந்தால் இந்தியா வெற்றிபெற்றிருக்கும். எனக்கு ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுங்களேன் ” என்று தெரிவித்தார்.

மேலும், “அரசியலிலும் விளையாட்டிலும் வெற்றி, தோல்வி என்பது சகஜமானதுதான். அதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் எப்படி தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதோ அதுபோலதான் இந்தியாவுக்கு உலகக் கோப்பையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் இந்திய அணி வெற்றிபெறும். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக என்றும் வெற்றிபெறும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

அஜித் சம்பளம் 100 கோடியா?


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon