மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

கோலி, அமித் ஷாட்ட ஐடியா கேளுங்க: அப்டேட் குமாரு

கோலி, அமித் ஷாட்ட ஐடியா கேளுங்க: அப்டேட் குமாரு

அடேயப்பா போதும்டா சாமி நேத்து மேட்ச் பார்த்து அழுதீங்க சரி.. இன்னைக்கு அதை நினைச்சு நினைச்சு அழுதே டிவிட்டர் பேஸ்புக் முழுக்க கண்ணீரா வடிஞ்சு ஓடுது. ஒருவேளை இப்படி ஸ்டேட்டஸ் போட்டாதான் லைக் வரும்னு யாரும் கிளப்பிவிட்டாங்களோ என்னமோ.. இந்த கடுப்புல இருக்கும் போதுதான் ஜெயகுமார் ‘நான் மட்டும் போயிருந்தேன்னா’ன்னு ஆரம்பிச்சு கூட்டத்தை தன் பக்கம் இழுக்க டிரை பண்ணுறார். ஆனா மைக் டைசன் ஓரமா போய் விளையாடுங்கன்னு பசங்க கலாய்ச்சுகிட்டு இருக்காங்க. இவ்வளவு வருத்தப்படுறவங்க என்ன பண்ணனும் அமித் ஷாட்ட முதல்லயே ஐடியா கேட்ருக்கனும். அவர் மட்டும் களத்துல இறங்கியிருந்தார்னா 9 நியூசிலாந்து பிளேயர்ஸ் அங்க ரிசைன் பண்ணிட்டு இந்தியா டீம்ல வந்து சேர்ந்துருப்பாங்க. இந்தியா ஃபைனல் போயிருக்கும்.. ஐடியா இல்லாத பசங்களா இருக்காங்க. அப்டேட்டை பாருங்க.

கோழியின் கிறுக்கல்!!

'பபிள்கம்'ஐ அப்படியே சாலையில் துப்பி விட்டு செல்பவருக்கு தான் நாட்டிலேயே உச்சபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்!!

மித்ரன்

ஏ.டி.எம் போல 24 மணி நேரமும் இயங்குபவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - கே.மோகன் MLA #

ஏன் எப்பவும் அவுட் ஆஃப் சர்வீஸ்லையே இருப்பாரா..?!

JKK

தோத்தவனுங்களே தூங்கி எந்திரிச்சு அடுத்த பொழப்ப பார்க்க போயிருப்பாங்க..

திஸ் ஃபண்ணி கைஸ் இன்னும் கதறிகிட்டு இருக்குதுக..

கருப்பு மன்னன்

"மாட்டை சாவடிச்சி சாப்பிடறீங்களே.. உங்க வயிறென்ன சுடுகாடா? - இந்து முன்னணி

மாட்டு மூத்திரம் குடிக்கிறீங்களே உங்க வயிறு என்ன செப்டிக் டேங்க்கா

கோழியின் கிறுக்கல்!!

மழைக்காலத்தில் பல்லிளிக்கும் தார் சாலை போலவே,

நம் துன்ப காலத்தில் சில உறவுகளும்!!!

மித்ரன்

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நான் விளையாடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் #

என்னடா இது இந்திய கிரிக்கெட் டீமுக்கு வந்த சோதனை..?!

எனக்கொரு டவுட்டு

ரவீந்திர ஜடேஜா மீதான விமர்சனத்துக்கு மன்னிப்பு கோரினார் சஞ்சய் மஞ்ச்ரேகர்!# வா அருணாச்சலம், நீ வருவேன்னு தெரியும் இவ்ளோ சீக்கிரம் வருவேன்னு எதிர்பார்க்கல..!

ஜோக்கர்...

குழந்தைகள் தவறு செய்யும் போதெல்லாம் அப்பாவின் பிள்ளையாகவும்,

சரியானதை செய்யும் போதெல்லாம் அம்மாவின் பிள்ளையாகவும் ஆகிறார்கள்..!!!

உள்ளூராட்டக்காரன்

இந்த NZ Vs IND மேட்ச்சோட ஹைலைட்ஸ் பார்க்கிறதெல்லாம், நம்ம கல்யாண வீடியோவை நாமளே திரும்ப போட்டு பார்க்குற மாதிரி கொடுமையான விஷயம்

S.K.Soundhararajan

திமுகவில் தந்தை,மகன்,பேரன் என வாரிசு அரசியல் நடக்கிறது.-ரவி அதிமுக எம்எல்ஏ #

இதை கேட்டு ஓபிஎஸ் மகன் சிரிக்காமல் இருந்த சரி.

கருப்பு மன்னன்

“இந்திய அணியின் போராட்டக் குணத்தை காண முடிந்தது” - பிரதமர் மோடி

எடியூரப்பாயும் அதான் பன்றார் போல ..

நெல்லை அண்ணாச்சி

கிரிக்கெட் மாதிரி...

" பிக் பாஸ் " ம் சட்டுபுட்டு ன்னு முடிஞ்சா வீடு அமைதிக் காடு ஆகிடும்..

எனக்கொரு டவுட்டு

இந்திய அணியும், அதிமுகவும் தோல்வியிலிருந்து மீண்டு வரும்” - அமைச்சர் ஜெயக்குமார்# அதிமுகவை அடகுல இருந்து மீட்டுட்டுதான் வரணும்..!

கோவக்காரி

சிவகங்கை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும்-எச்.ராஜா

ஒவ்வொரு தடவையும் செலவு பண்ணி ஊருக்கு வந்து உங்களை தோற்கடிக்க கஷ்டமா இருக்கு தலைவரே

அபிவீரன்

நான் விளையாடி இருந்தால், இந்திய அணி அரையிறுதியில் ஜெயித்திருக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்

அப்போ மைக் டைசன் பாக்ஸர் இல்லையா?

S.K.Soundhararajan

கர்நாடகாவில் நடந்து வரும் குழப்பத்திற்கு பாஜக காரணம் இல்லை.-ராஜ்நாத் சிங்.#

எப்பவும் போல பாகிஸ்தான் சதியின் சொல்லி விடுங்க.!

எனக்கொரு டவுட்டு

இந்தியா தோல்வி எதிரொலி, சரக்கு விற்பனை அமோகம்னு செய்தி வராம இருந்தா சர்தான்..!!

மெத்த வீட்டான்

மழை தொந்தரவு தாங்காமல் கோப்பையை தங்களிடம் ஒப்படைத்துவிட்டு மற்ற நாடுகள் ஓடணும்னு நினைச்சே இங்கிலாந்துல மேட்ச் வச்சிருப்பானுங்க போல !

-லாக் ஆஃப்

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon