மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜூலை 2019

வேகமெடுக்கும் இயக்குநர்கள் சங்கத் தேர்தல்!

வேகமெடுக்கும் இயக்குநர்கள் சங்கத் தேர்தல்!

இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கான போட்டி தற்போது அதிகரித்துள்ளது

நடிகர்கள் சங்கத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலும் தமிழ்த் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இயக்குநர்கள் சங்கத்தின் 99ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் ஒன்றுகூடி இயக்குநர் பாரதிராஜாவைத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தனர். இதனால் சங்கத்தின் மற்ற பதவிகளுக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க ஜூலை 14ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஜூலை 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான எதிர்ப்பும் சங்கத்துக்குள் எழுந்தன. இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்டோர் இதை விமர்சித்திருந்தனர். இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநர்கள் சங்க பொதுக்குழுவுக்குப் பெரும்பாலும் வராதவர் பாரதிராஜா என விமர்சித்தார்.

பாரதிராஜாவும், “தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரைத் தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன்” என்று பாரதிராஜா விளக்கமளித்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜினாமா செய்துவிட்டு பாரதிராஜா தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒதுங்கியிருக்கப் போவதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில் தற்போது தலைவர் பதவிக்கான போட்டி அதிகரித்துள்ளது. அந்தவகையில் இயக்குநர்கள் பி.வாசு, அமீர், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

பல்முனைப் போட்டி நிலவுவதால் இயக்குநர்கள் சங்கமும் தமிழ்த் திரையுலகில் விவாதப்பொருளாகியுள்ளது.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

வியாழன் 11 ஜூலை 2019