மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

ரயில்வே துறையில் வேலை உருவாக்கம்!

ரயில்வே துறையில் வேலை உருவாக்கம்!

இந்த ஆண்டில் 2.94 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வேலையின்மை பிரச்சினை நீண்ட காலமாகவே அதிக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. மோடி அரசானது மக்களுக்கான வேலை உருவாக்கத்தில் போதிய கவனம் செலுத்துவதில்லை என்பதே பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இதுபோன்ற சூழலில் மோடி அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளதால் வேலை உருவாக்கத்தில் அதிகக் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அரசுத் துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் துரிதமாக நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ரயில்வே துறையில் ஜூன் 1 நிலவரப்படி காலியாக உள்ள 2.98 லட்சம் பணியிடங்களில் இந்த ஆண்டில் மட்டும் 2.94 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜூலை 10ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின் போது, மத்திய ரயில்வே துறை அமைச்சரான பியூஷ் கோயல், ”ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 1991ஆம் ஆண்டில் 16,54,985 ஆக இருந்தது. அது 2019ஆம் ஆண்டில் 12,48,101 ஆக உள்ளது. ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் ரயில்வே துறையின் செயல்பாடுகள் மற்றும் சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் ரயில்வே ஆள் சேர்ப்பு வாரியத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன. ஜூன் 1 நிலவரப்படி, 2,98,574 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 2,94,420 இடங்களை நிரப்புவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம். 1,51,843 இடங்களுக்கான தேர்வுகள் இதுவரையில் நடத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon