மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

முடிவுக்கு வந்த உலகப்போர் வரலாறு!

முடிவுக்கு வந்த உலகப்போர் வரலாறு!

வரலாற்று புகழ்பெற்ற பீட்டில் காரின் உற்பத்தியை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

சுமார் 81 ஆண்டுகளுக்கு முன் 1938ஆம் ஆண்டில், ஜெர்மன் நாட்டின் சாதாரண மக்களும் கார் பயன்படுத்த வேண்டுமென்ற நோக்கத்திற்காகவும், முதல் உலகப்போரால் சேதமடைந்த ஜெர்மன் பொருளாதாரத்தை மீண்டு வலுப்படுத்தவும் மலிவு விலையில் கார் உற்பத்தி செய்யும் பணியை ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் ஹிட்லர் ஒப்படைத்தார். அதன்படி பீட்டில் கார் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டது. விலை மலிவாக இருந்ததால் விற்பனையும் சூடுபிடித்தது. பார்ப்பதற்கு வண்டு போன்ற வடிவில் இருப்பதால் இந்த காரின் ரசிகர்கள் அதைச் செல்லமாக bug (வண்டு) எனவும் அழைப்பதுண்டு.

அதிகளவில் விற்பனையான கார்களின் பட்டியலில் பீட்டில் அடிக்கடி இடம்பெறுவது வழக்கம். மேலும், 1960ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அதிகம் இறக்குமதியாகி விற்பனையான காரும் இதுவே. இந்நிலையில், பீட்டில் உற்பத்தியை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, பீட்டில் காரின் மூன்றாம் தலைமுறை மாடலின் கடைசி வாகனம் நேற்று (ஜூலை 10) மெக்சிகோ நாட்டின் பியூப்லாவிலுள்ள ஃபோக்ஸ்வேகன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது. இறுதியாக உற்பத்தியான பீட்டிலுடன் அதை உருவாக்கிய தொழிலாளர்கள் சூழ்ந்து பெருமையுடன் படம் எடுத்துக்கொண்டனர்.

பியூப்லாவிலுள்ள ஃபோக்ஸ்வேகன் ஆலை உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி ஆலைகளில் ஒன்றாகும். ஆலை மட்டுமல்லாமல் பியூப்லாவில் ஃபோக்ஸ்வேகனின் அருங்காட்சியகமும் உள்ளது. நேற்று உற்பத்தியான கடைசி பீட்டில் கார் விற்பனைக்கு வராது எனவும், ஃபோக்ஸ்வேகனின் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கெனவே உற்பத்தியாகி விற்பனைக்காக தயாராக உள்ள பீட்டில் கார்கள் அமேசான் இணையதளத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும் ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon