மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

ஜன் தன் வங்கிக் கணக்கில் குவியும் பணம்!

ஜன் தன் வங்கிக் கணக்கில் குவியும் பணம்!

மத்திய அரசின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் டெபாசிட் தொகை ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத சுமார் 7 கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய, மாநில அரசின் நிதியுதவிகள் இந்த ஜன் தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. ஜன் தன் வங்கிக் கணக்குகளில் இதுவரையில் செலுத்தப்பட்ட மொத்த தொகையின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 3 நிலவரப்படி, மொத்தமுள்ள 36.06 கோடி ஜன் தன் கணக்குகளில் ரூ.1,00,495.94 கோடி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜூன் 6ஆம் தேதியில் ரூ.99,649.84 கோடியும், மே 31ஆம் தேதி ரூ.99,232.71 கோடியும் இருந்தது. அதேபோல, ஜன் தன் வங்கிக் கணக்குகளில் ஜீரோ பேலன்ஸ் உள்ள வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 5.10 கோடியாக இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது மொத்த ஜன் தன் கணக்குகளில் 16.22 சதவிகிதமாகும். மார்ச் மாதத்தில் இதன் எண்ணிக்கை 5.07 கோடியாக இருந்தது.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon