மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

முடக்கப்படும் அரசு இணையதளங்கள்!

முடக்கப்படும் அரசு இணையதளங்கள்!

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 25 அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜூலை 11ஆம் தேதி மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், “இந்தியக் கணினி அவசரக் காலக் கண்காணிப்புக் குழுவிடமிருந்து கிடைத்த தகவலின்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில் மத்திய மாநில அரசுகளின் 25 இணையதளங்கள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டில் 199 இணையதளங்களும், 2017ஆம் ஆண்டில் 172 இணையதளங்களும், 2018ஆம் ஆண்டில் 110 இணையதளங்களும் இதுபோல முடக்கப்பட்டன” என்று தெரிவித்தார்.

மேலும், “சைபர் வெளி என்பது பாதுகாப்பு எல்லைகளற்ற இடமாகும். அங்கு எங்கிருந்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், யாரிடமிருந்தும் (சைபர்) தாக்குதல்கள் வரலாம். இத்தாக்குதல்களைத் தடுக்க அரசு தரப்பிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று விளக்கமளித்தார். சைபர் தாக்குதல்களுக்கு எதிராக, தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 70ஏ-இன் கீழ் தேசிய சிக்கலான தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறினார். சைபர் தாக்குதல்கள் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் இந்தியக் கணினி அவசரக் காலக் கண்காணிப்புக் குழுவிடமிருந்து வழங்கப்படுகிறது. அதைத் தாண்டியும் சைபர் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon