மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

நான் யாருக்கும் ஆதரவாகவும் எதிராகவும் இல்லை: சபாநாயகர்!

நான் யாருக்கும் ஆதரவாகவும் எதிராகவும் இல்லை: சபாநாயகர்!

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் குறித்து கவனமாகப் பரிசீலித்துதான் முடிவெடுக்க முடியும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஜூலை 6ஆம் தேதி பதவி விலகுவதாகச் சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். அந்தக் கடிதத்தைச் சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்காத நிலையில் தங்களது ராஜினாமாவை ஏற்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து நேற்று (ஜூலை 11) மாலை 6 மணிக்கு சபாநாயகரைச் சந்திக்க 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் பேரில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் நேற்று மாலை 6 மணிக்கு பெங்களூருவில் சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமாவை ஏற்க வலியுறுத்தினர். அவர்களுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ.க்களுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய பிறகு சபாநாயகர் ரமேஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, தனது பொதுவாழ்வில் ஒரு விநோதமான சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகக் கூறிய அவர், “எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதில் தாமதிக்கவில்லை. என்னால் மின்னல் வேகத்தில் எந்த முடிவும் எடுக்க இயலாது. இவர்கள் தாமாக முன்வந்துதான் பதவியை ராஜினாமா செய்கிறார்கள் என்பது உறுதியாக வேண்டும். ராஜினாமாவை நிறுத்திவைத்து அரசைக் காக்கவைக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. நான் என் மண்ணை நேசிக்கிறேன்” என்றார்.

“13 பேரின் ராஜினாமா கடிதம் முறையான வடிவில் இல்லை. மீதமுள்ள 5 எம்.எல்.ஏ.க்களை ஜூலை 12 மற்றும் 15ஆம் தேதி சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க எனக்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களின் அடிப்படையில் ராஜினாமா கடிதத்தின் மீது முடிவெடுக்க ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ ஆகலாம். நான் யாருக்கும் ஆதரவாகவும் எதிராகவும் இல்லை” என்றார்.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon