மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

மரண தண்டனையை ஆதரிக்கும் ‘இருளன்’!

மரண தண்டனையை ஆதரிக்கும் ‘இருளன்’!

இயக்குநர் பாலாஜி மோகன் இளைஞர்களின் புதிய கூட்டணியில் உருவான இருளன் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தை பற்றி அறிமுக இயக்குநர் யு.சூர்யா பிரபு கூறியதாவது; ‘ஒவ்வொரு மனிதருக்கும் தான் செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு. இக்கால இளைஞர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக அமையும் படமே இருளன்’.

மேலும் ‘இப்படத்தில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பாவத்தைச் செய்து விட, செய்தவர்களுக்கு ஒரே தண்டனை தான், அது மரணம் தான் என்ற வலிமையானக் கருத்தை இப்படம் தாங்கி நிற்கும்’ எனக் கூறியுள்ளார்.

இப்படத்தின் நாயகர்களாக ஸ்ரீகாந்த், பிரபு, அர்த்திஃப், ரோஹன் ஆகியோர் நடிக்கிறார்கள். யு.ஹர்ஷ வர்தனா இசையமைத்து ஒளிப்பதிவு செய்கிறார். ஏகலைவன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விரைவில் திரைக்கு வர காத்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பாலாஜி மோகன் இன்று வெளியிட்டுள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon