மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

சென்னை: 2021க்குள் புதைவிட கம்பிகள் அமைப்பு!

சென்னை: 2021க்குள் புதைவிட கம்பிகள் அமைப்பு!

சென்னையில் 2021ஆம் ஆண்டுக்குள் உயர் மின் அழுத்தக் கம்பிகள் புதைவிட கம்பிகளாக மாற்றப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் இன்று (ஜூலை 12) கேள்வி நேரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதியில் புதைவிட கம்பிகள் அமைக்கப்படும் பணி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. உயர் மின் அழுத்தக் கம்பிகளால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கிறது என்று தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, “புதைவிட மின் கம்பிகள் அமைப்பதற்கான டெண்டர் விடுவதில் கால தாமதம் ஆகிவிட்டதாலும், இரவு நேரங்களில் மட்டுமே பணி செய்ய முடிவதாலும் கால தாமதம் ஏற்படுவதாக” தெரிவித்துள்ளார். கொளத்தூர் பகுதிகளில் ஓராண்டிலும் , மற்ற பகுதிகளில் இரண்டு ஆண்டுகளிலும் அதாவது, 2021க்குள் இப்பணிகள் முடிக்கப்படும். சென்னையில் 6,532 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ. 2,567 கோடி செலவில் புதைவிட கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon