மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

அசுரன்: ஜி.வி வெளியிட்ட மியூசிக் அப்டேட்!

அசுரன்: ஜி.வி வெளியிட்ட மியூசிக் அப்டேட்!

தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் பாடல்கள் குறித்த முக்கிய தகவலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் அசுரன். பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

படம் குறித்த தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் ஜி.வி.பிரகாஷ் பொல்லாத பூமி என்ற பாடல் பதிவு ஏற்கெனவே தெரிவித்திருந்தார். தற்போது நாட்டுப்புற பாடல் ஒன்று படத்தில் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

இயக்குநரும் பாடலாசிரியருமான ஏகாதசி இதற்கான வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல் பதிவு இந்த வாரம் நடைபெறுவதாகவும், பாடகர் யார் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் மலையாள நடிகை மஞ்சு வாரியர் முதன் முறையாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். கருணாஸின் மகனான கென் தனுஷின் மகனாக நடிக்கிறார். மதுரை, கோவில்பட்டி ஆகிய ஊர்களைச் சுற்றி இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon