மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜூலை 2019

சென்னை வந்தது ஜோலார்பேட்டை தண்ணீர்!

சென்னை வந்தது ஜோலார்பேட்டை தண்ணீர்!

சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரும் ரயில், ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டு சென்னையை வந்தடைந்தது.

சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து, சென்னைக்கு இரயில் மூலம் குடிநீர் எடுத்து செல்லும் திட்டத்தை கடந்த மாதம் முதல்வர் எடப்பாடி அறிவித்தார். இதற்காக ரூபாய் 65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்காக பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள், தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள், இரயில்வே அதிகாரிகள் இரயில் மூலம் தண்ணீர் எடுத்து செல்ல இடத்தை தேர்வு செய்தனர்.

அதன்படி, மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி, அதிலிருந்து பார்சம்பேட்டை ரயில்வே கேட் வரை 3.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய்கள் அமைக்கப்பட்டது. குடிநீர் எடுத்து செல்வதற்காக தயாரிக்கப்பட்ட 50 வேகன்கள் கொண்ட இரயில் சென்னைக்கு கொண்டுவரப்பட்டன.

மொத்தம் 50 வேகன்கள் கொண்ட இந்த இரயில், சோதனை ஓட்டமாக, இரு நாட்களுக்கு, 25 லட்சம் லிட்டர் தண்ணீரை சென்னைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாள் ஒன்றுக்கு இருமுறை தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று (ஜூலை 12) காலை 7 மணியளவில் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட குடிநீர் இரயில் மதியம் 11:30 மணியளவில் வில்லிவாக்கம் வந்தடைந்தது. வில்லிவாக்கத்தில் இருந்து குழாய் மூலமாக கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்திற்கு கொண்டுசென்று சுத்திகரித்த பிறகு சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வெள்ளி 12 ஜூலை 2019