மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

பார்ட்னர்ஷிப்பை நம்பும் சிம்பு!

பார்ட்னர்ஷிப்பை நம்பும் சிம்பு!

சிம்பு - கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுவருகிறது.

சிம்பு நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. அந்தப் படத்தைத் தொடர்ந்து சிம்பு கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ள அவர் அதற்காக லண்டன் சென்று உடல் எடையை குறைத்துவந்தார்.

சிம்புவின் திரைப்பயணத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த படங்களே அதிக அளவில் அணிவகுத்துள்ளன. முன்னணி கதாநாயகர்கள் பெரும்பாலும் மற்ற நாயகர்களின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க மறுக்கும் நிலையில் சிம்பு அதை துணிந்து செய்கிறார்.

இந்த ஆண்டு ஓவியா நடிப்பில் வெளியான 90எம்எல் படத்தில் நடித்த அவர், அடுத்ததாக ஹன்சிகா நடிப்பில் தயாராகும் மஹா படத்திலும் சில காட்சிகளில் நடித்துள்ளார். தற்போது கௌதம் கார்த்திக்குடன் இணைந்து புதிய படத்தில் நடித்துவருகிறார்.

கன்னடத்தில் நர்த்தன் இயக்கத்தில் வெளியான 'மப்டி' திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்து புகழ்பெற்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துவருகிறார்.

தயாரிப்பு எண் 20 என பெயரிடப்பட்டுள்ள, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 15 ஆம் தேதி தொடங்கியது. 'மப்டி' படத்தை இயக்கிய நர்த்தன் இந்த திரைப்படத்தையும் இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் மூடர்கூடம், பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்ற சென்ராயன் இணைந்துள்ளார்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon