மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

அதிகாரம்: கிரண் பேடி மனு தள்ளுபடி!

அதிகாரம்: கிரண் பேடி மனு தள்ளுபடி!

துணை நிலை ஆளுநருக்கான அதிகாரம் தொடர்பாக கிரண் பேடி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 11) தள்ளுபடி செய்தது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு கோப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள் துறை அமைச்சகம் வழங்கிய கூடுதல் அதிகாரத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஏப்ரல் 30ஆம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மத்திய அரசு, கிரண் பேடி தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், புதுச்சேரி நிர்வாகத்தில் உயர் நீதிமன்ற கிளை விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இந்து மல்ஹோத்ரா மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஜூன் 21ஆம் தேதிவரை அமல்படுத்த தடை விதிப்பதாகத் தெரிவித்தனர். ஜூலை 21ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அந்தத் தடையை ஜூலை 10ஆம் தேதி வரை நீட்டித்தனர்.

இந்த சூழலில் இன்று (ஜூலை 12) இவ்வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் எனவும், புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் துணை நிலை ஆளுநர் தலையிடக் கூடாது என்றும் கூறிய நீதிபதிகள் கிரண்பேடியின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள், புதுச்சேரி அமைச்சரவை முடிவுகள் எடுக்க விதிக்கப்பட்ட தடையையும் நீக்கினர்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon