மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜூலை 2019

கும்பல் படுகொலைக்கு 7 ஆண்டு சிறை!

கும்பல் படுகொலைக்கு 7 ஆண்டு சிறை!

கும்பல் படுகொலைகள் அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான தண்டனைகளை உத்தரப் பிரதேச சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. உ.பி சட்ட ஆணையத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஆதித்யநாத் மித்தல் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கும்பல் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்த தற்போதைய சட்டவிதிகள் போதாது எனவும், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில அதிகாரிகள் கடமை தவறுவதால் அவர்களின் கண்காணிப்பிலேயே கும்பல் படுகொலைகள் அரங்கேறுவதாகவும், அக்குற்றங்களுக்கு அதிகாரிகளே பொறுப்பு எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளிடையே அச்சத்தை உண்டாக்க வேண்டுமெனில் கும்பல் படுகொலையை தனிக் குற்றமாக அறிவித்து, தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் பரிந்துரைகள் பின்வருமாறு,

1. பாதிக்கப்பட்டவருக்கு காயம் ஏற்பட்டிருந்தால் குற்றவாளிக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.

2. பாதிக்கப்பட்டவர் படுகாயம் அடைந்திருந்தால் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.

3. பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க வேண்டும்.

4. கும்பல் படுகொலைக்கு உடந்தையாகவும், தூண்டுதலாகவும் இருப்போருக்கு குற்றவாளிக்கு வழங்கப்படும் அதே தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

5. கும்பல் படுகொலை விவகாரத்தில் கடமை தவறும் அதிகாரிகளுக்கு ஓராண்டு முதல் மூன்றாண்டு சிறைத்தண்டனையும், ரூ.5,000 வரை அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.

6. பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான சூழலை உருவாக்குவோருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டோருக்கு எதிரான சூழல் எனில், அவர்களின் வியாபாரத்தை புறக்கணிப்பது, பொதுவெளியில் அவர்களை அவமானப்படுத்துவது, அடிப்படை உரிமைகளை மறுப்பது, ஊரை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துவது உள்ளிட்டவை அடங்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரையும் தண்டிக்க வேண்டுமென்று உ.பி சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வெள்ளி 12 ஜூலை 2019