மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜூலை 2019

முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே இணையதளம்!

முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே இணையதளம்!

தொழில் துறையில் முதலீடுகளை ஈர்க்க ரூ.60 லட்சம் செலவில் யாதும் ஊரே என்ற இணையதளம் துவங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை கவருவதற்காக சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தமிழக அரசின் சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர், இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் தொழில் முதலீடு செய்ய முன்வந்து, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று (ஜூலை 12) 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டுப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தொழில் துறையில் முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே என்ற இணையதளம் ரூ.60 லட்சத்தில் துவங்கப்படும். தொழில் வளர் தமிழகம் என்ற அடையாளத்துடன் கூடிய இணையதளம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

மேலும், “ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.50 கோடி மதிப்பில் குடியிருப்புகள் கட்டப்படும். தூத்துக்குடியில் ரூ.634 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். தூத்துக்குடியில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் அளவிற்கு கடல்நீரை குடிநீராக்கும் திறன்கொண்ட ஆலை அமைக்கப்படும். காஞ்சிபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ.26 கோடியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நீண்ட கால, குறுகிய கால புதிய தொழில் பிரிவுகள் துவங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார். அதுபோலவே, கோவையில் 9 ஏக்கர் நிலத்தில் சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.200 கோடியில் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வெள்ளி 12 ஜூலை 2019