மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

மீண்டும் ஜெய்யுடன் இணைந்த அதுல்யா

மீண்டும் ஜெய்யுடன் இணைந்த அதுல்யா

கேப்மாரி படத்தை தொடர்ந்து ஜெய் நடிக்கும் புதிய படத்திலும் அதுல்யா ரவி இணைந்து நடிக்கவுள்ளார்.

காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி. சமீபத்தில் வெளியான சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தில் விக்ராந்தின் காதலியாக வந்த அதுல்யா, அதனைத் தொடர்ந்து நாடோடிகள் 2, அடுத்து சாட்டை என அடுத்தடுத்து ஒப்பந்தமான படங்களில் நடித்து முடித்துள்ளார். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கும் படம் கேப்மாரி. இரு கதாநாயகிகள் கொண்ட இப்படத்தில் அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா ஆகியோர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெய் நடிக்கும் மற்றொரு படத்திலும் கதாநாயகியாக அதுல்யா ஒப்பந்தமாகியுள்ளார். ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கவுள்ளார். இப்படத்தில் வைபவின் சகோதரர் சுனில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சாம் சி.எஸ் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon