மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

ஜீவி இயக்குநருடன் இணைந்த விஷ்ணு

ஜீவி இயக்குநருடன் இணைந்த விஷ்ணு

விஷ்ணு விஷால் தான் புதிதாக இணைந்துள்ள படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது நான்கு படங்கள் தயாராகிவருகின்றன. பிரபு சாலமோன் இயக்கத்தில் காடன் திரைப்படத்தின்போது காயமடைந்த அவர், தற்போது மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறார். அந்தப் படத்தைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜகஜால கில்லாடி, விஜய் சேதுபதி திரைக்கதை எழுத விக்ராந்துடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்துவருகிறார். சமீபத்தில் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்திலும் இணைந்தார்.

தற்போது புதிய படம் பற்றிய அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்ற திரைப்படம் ஜீவி. வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தில் வெற்றி கதாநாயகனாக நடித்திருந்தார். கதை, திரைக்கதையை பாபு தமிழ் எழுதியிருந்தார்.

கருணாகரன், ரோகிணி, மைம் கோபி மற்றும் பலர் நடித்திருக்கும் படத்துக்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்திருந்தார். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் கே.எல் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

தற்போது வி.ஜே.கோபிநாத்தும், பாபு தமிழும் இணைந்து உருவாக்கும் படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார். இதை அவரது விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மூவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள விஷ்ணு விஷால், தற்போது திரைக்கதை எழுதும் பணி நடைபெற்றுவருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon