மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

ஹாலிவுட் வாய்ப்பை மறுத்த விக்ரம்

ஹாலிவுட் வாய்ப்பை மறுத்த விக்ரம்

‘அவர்களின் தந்திரங்களுக்கு நடிகர்கள் அடிபணியாமல் இருக்கவேண்டும்’ என ஹாலிவுட் வாய்ப்பை நிராகரித்த விக்ரம் கூறியுள்ளார்.

ஹாலிவுட் வாய்ப்பு என்பது திறமை அடிப்படையிலும், மார்க்கெட் அடிப்படையிலும் அடுத்த கட்ட வளர்ச்சியாக ஆசிய, இந்திய திரையுலகில் பரவலாக பார்க்கப்படுகின்றது. ஹாலிவுட் படங்களில் நடிக்க தீவிரமான முயற்சியில் ஈடுபடும் நடிகர்கள் பற்றிய செய்திகளும் அவ்வப்போது வெளியாகிவருகிறது. சமீபத்தில் அப்படித் தானாக தேடிவந்த வாய்ப்பை விக்ரம் மறுத்திருக்கிறார்.

தி மேட்ரிக்ஸ் பட நாயகன் கேயானு ரீவ்சுடன் நடிக்க முன்னணி ஹாலிவுட் நிறுவனம் விக்ரமை அனுகியிருக்கிறது. ஆனால் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால் அவ்வாய்ப்பை நிராகரித்துள்ளார் விக்ரம். அதற்கான காரணத்தை தெரிவித்த விக்ரம்:

”இந்தியாவிலும் ஆசியாவிலும் உள்ள பெரிய நட்சத்திரங்களுக்கு ஹாலிவுட் சிறிய பாத்திரங்கள் வழங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அதனால் நடிகர்கள் அவர்களின் தந்திரங்களுக்கு அடிபணியாமல் கவனமாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ஹாலிவுட் தனது மார்கெட்டை விரிவுபடுத்தவும், பிராந்திய ரசிகர்களை ஈர்க்கவும் ஆசிய, இந்திய நடிகர்களை பயன்படுத்துவதை சாடிய விக்ரமின் இக்கருத்து வரவேற்பு பெற்றுவருகிறது.

விரைவில் வெளியாகவிருக்கும் கடாரம் கொண்டான் படத்தின் புரமோஷன் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் விக்ரம். அதனைத் தொடர்ந்து இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்திலும், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்க உள்ளார்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon