மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜூலை 2019

மீண்டும் தொடங்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை!

மீண்டும் தொடங்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை!

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது.

அமெரிக்காவும், இந்தியாவும் ஒருவர் மீது மற்றொருவர் வரிகளை உயர்த்தி வர்த்தகப் பதற்றம் உருவாகியுள்ளது. அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பில் வர்த்தகப் பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஜி20 மாநாட்டிற்கு முன்பு டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா பல ஆண்டுகளாக அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகளை விதித்து வருகிறது. அண்மையில்கூட வரிகளை மேலும் உயர்த்தியுள்ளது இந்திய அரசு. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. வரிகளை இந்தியா திரும்பப்பெற வேண்டும். இதுகுறித்து பிரதமர் மோடியிடம் பேச காத்திருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

ஜி20 மாநாடு முடிந்துவிட்டபோதிலும் ஜூலை 9ஆம் தேதியன்று டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீண்டகாலமாக அமெரிக்க தயாரிப்புகள் மீது இந்தியா அதிக வரிகளை விதித்து வருகிறது. இதையெல்லாம் மேலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று வர்த்தகப் பிரச்சினை விவகாரத்தை இழுத்தார்.

வர்த்தகப் பிரச்சினையால் நட்பு நாடுகளான அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவில் சிறு விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று (ஜூலை 12) அமெரிக்க அதிகாரிகளும், இந்திய அதிகாரிகளும் சந்தித்து வர்த்தக விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர். முதலில் அமெரிக்காவின் பிரதிநிதிகள் குழு வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்கவுள்ளனர். பிறகு வர்த்தக அமைச்சக அதிகாரிகளையும், தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வெள்ளி 12 ஜூலை 2019