மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

10% இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் தமிழகம்!

10% இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் தமிழகம்!

தமிழகத்தில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் கூடுதலாக 375 எம்.பி.பி.எஸ். சீட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் அதை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதுவரை சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் தற்போது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் ஏற்கெனவே இருக்கும் 50 சதவிகித இட ஒதுக்கீட்டுடன் தற்போது இந்த கூடுதல் 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் கூடுதலாக 1,000 மருத்துவ சீட்டுகள் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் இதை அமல்படுத்தினால் 375 சீட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்று தமிழக மாநில சுகாதாரத் துறை கூறுகிறது. மருத்துவப் படிப்புகளுக்கான இயக்குநரக அதிகாரிகள் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகளை ஜூலை 10ஆம் தேதி டெல்லியில் இதுகுறித்து சந்தித்துப் பேசியுள்ளனர். சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகள் இட ஒதுக்கீட்டுக்கான பட்டியலில் சேர்க்கப்படாது என்று தெரிவித்துள்ளனர். ஏனெனில் இக்கல்லூரிகளுக்கு ஏற்கெனவே இந்திய மருத்துவ கவுன்சிலின் வரையறைப்படி அதிகபட்சமாக 250 இடங்கள் வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, 2020ஆம் ஆண்டில் மருத்துவ இடங்கள் கோரி விண்ணப்பித்திருந்த கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியும், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியும் தகுதியின்மை காரணமாக நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல, ஐந்து ஆண்டுகள் நிறைவுபெறாத மேலும் மூன்று கல்லூரிகளும் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. 25 சதவிகித கூடுதல் இடங்கள் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை வைத்துப் பார்த்தால், தமிழகத்துக்கு 9 கல்லூரிகளுக்கு 225 இடங்கள் மட்டுமே கிடைக்கும். எப்படியானாலும், தமிழக கல்லூரிகளுக்கு அதிகபட்சமாக 650 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

25 சதவிகித இட ஒதுக்கீட்டுக்குத் தமிழகத்தில் உள்ள 23 அரசுக் கல்லூரிகளில் 13 கல்லூரிகள் மட்டுமே தகுதியானவை என்று மதிப்பீடுகள் கூறுகின்றன. எனினும், 10 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தமிழகத்தில் அமல்படுத்தினால் எத்தனை இடங்கள் சரியாகக் கிடைக்கும் என்ற மதிப்பீடு எதுவும் வெளியாகவில்லை. குறைந்த சீட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்ற இந்த மதிப்பீடுகள் குறித்த விவரங்களைத் தமிழக அரசுடன் மருத்துவத் துறை விவாதிக்கும் எனவும், தேவைப்பட்டால் இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon