மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜூலை 2019

நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்: குமாரசாமி

நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்: குமாரசாமி

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா, தகுதிநீக்க வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 10 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் முக்கியப் பிரச்சினைகள் இருப்பதாகவும், மேற்கொண்டு விசாரணை தேவை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா, தகுதிநீக்கம் தொடர்பான விவகாரத்தில் ஜூலை 16ஆம் தேதி வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

மறுபுறம், கர்நாடக சட்டமன்றம் இன்று கூடியது. அப்போது, “அரசியல் நெருக்கடி சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்புக்கான நாளை நிர்ணயுங்கள். பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருக்கிறேன். நான் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கிறேன். அதிகாரத்தை பிடித்துக்கொள்வதற்காக நான் இங்கு இல்லை” என்று முதலமைச்சர் குமாரசாமி சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். மழைக்கால கூட்டத்தொடரில் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பங்கேற்பார்கள் எனவும், கூட்டத்தொடரை தவிர்க்க முயலும் எம்.எல்.ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கந்த்ரே தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வெள்ளி 12 ஜூலை 2019