மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

தமிழ் ஒலி, தமிழ் எழுத்து!

தமிழ் ஒலி, தமிழ் எழுத்து!

ஒரு சொல் கேளீரோ! – 31: அரவிந்தன்

பிறமொழிச் சொற்களை எழுத வேண்டிய சூழல்களைப் பற்றிச் சென்ற பத்தியில் பார்த்தோம். அவற்றை எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைமைகளை இங்கே பார்க்கலாம்.

ஜோஹன்னஸ்பர்க், ரிஷப் பந்த், மத்தியப் பிரதேசம் முதலான பெயர்ச் சொற்களை எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில் பலவும் பிறமொழிச் சொற்களுக்குப் பொருந்தும். கூடுதலாக மேலும் இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடிப்படைகள்:

1. ஒரு சொல் எந்த மொழியிலிருந்து வருகிறதோ அந்த மொழியில் அதன் உச்சரிப்பு என்னவென்பதை அறிந்து அதற்கேற்ப எழுத வேண்டும்.

அப்படி அறிவதற்கான வழிமுறைகள் பெயர்களை எழுதுவது குறித்துக் கடந்த அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ளது. மொழி அறிந்தவர்கள், இணையப் பக்கங்கள், தொலைக்காட்சி செய்திகள், திரைப்படம் முதலான ஊடகங்கள் ஆகியவற்றின் உதவியுடன் இவற்றை அறியலாம்.

2. தமிழ் ஒலிப் பண்புக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டு:

சந்தோஷம் (மூலத்தில் சந்தோஷ் / சந்தோஷ)

விஷயம் (மூலத்தில் விஷய் / விஷய)

குரோதம் (க்ரோதம்)

பாவம் (பாபம்)

புண்ணியம் (புண்யம்)

பிரிட்டன் (ப்ரிட்டன்)

பிரகாசம் (ப்ரகாஷ)

பிரசாதம் (ப்ரசாத்)

காட்சி (காக்ஷி)

சாட்சி (சாக்ஷி)

தீட்சிதர் / தீட்சித் (தீக்ஷிதர்)

மோட்சம் (மோக்ஷ)

பிரியம் (ப்ரியம்)

அன்னியோன்னியம் (அன்யோன்ய)

எளிமை என்னும் அளவுகோல்

வடமொழிச் சொற்களை எழுதும்போது ஜ, ஹ, ஸ, க்ஷ ஆகிய எழுத்துகள் தேவைப்படும். ஆனால், கூடியவரை இவற்றைத் தவிர்த்து எழுதினால் தமிழில் படிக்க எளிமையாக இருக்கும்.

காக்ஷி என்பதைக் காட்டிலும் காட்சி என்பது எளிதாக இருக்கும்.

ஸரஸ்வதி என்று நாம் எழுதுவதில்லை. சரஸ்வதி என எழுதுகிறோம். இடையில் வரும் ஸ் என்னும் எழுத்தைத் தவிர்க்கவில்லை என்பதைக் கவனியுங்கள். இதைத் தவிர்த்துவிட்டு இதே ஒலி வரும் சொல்லைப் பயன்படுத்துவது கடினம். சிலர் சரசுவதி என்று எழுதி இந்தப் பிரச்சினையைத் தீர்க்கிறார்கள். ஆனால், இதில் ஒலி மாறுபாடு ஏற்படுவதால் சரஸ்வதி என்றே எழுதலாம்.

இந்து, இந்தி என்றே எழுதலாம். ஹிந்து, ஹிந்தி என்று எழுத வேண்டாம்.

ஆஹாரம் என்பதை ஆகாரம் என எழுதுகிறோம். விஹாரம் என்பது விகாரம் அல்லது விகாரை. ஆனால், கமல்ஹாஸன் போன்ற தனிநபர்களின் பெயர்களை கமலகாசன் என எழுதக் கூடாது என்று முன்பே பார்த்தோம். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உருது மொழியிலிருந்து வரும் சொற்கள்:

பேனசீர், பிரேம் நசீர், முஜிபுர் ரஹ்மான், ஜாவேத் அக்தர், பஜார், பேஜார், நிஜாம்,

இந்தச் சொற்களில் வரும் ச ஜ ஆகிய இரு ஒலிகளின் மூல ஒலியும் ஒன்றுதான் ஆங்கிலத்தில் உள்ள Z ஒலிக்கு ஒப்பான ஒலி அது. இந்த ஒலி பெயரின் நடுவில் வரும்போது ச என்னும் எழுத்தும் தொடக்கத்தில் வரும்போது ஜ என்றும் எழுத்தும் பயன்படுத்தப்படுகின்றன. பேஜார், பஜார் இரண்டிலும் நடுவில் வரும் எழுத்திலும் ஜ வருகிறது. இவை அனைத்துமே ஏற்கெனவே நிலைபெற்ற சொற்கள் என்பதால் இவற்றை அப்படியே பயன்படுத்துவதே முறையானது.

பிறமொழிச் சொற்களை உள்வாங்குவது எப்படி?

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon