மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

தனுஷுடன் மோதும் சந்தானம்

தனுஷுடன் மோதும் சந்தானம்

சந்தானம் நடிக்கும் ஏ1, தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகின்றன.

இவ்வருடம் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 2 படத்தின் வெற்றிக்குப் பின், சந்தானம் நடிக்கும் ரொமாண்டிக் காமெடியான ஏ1 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில், இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த மார்ச் மாதம் வெளியானது.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் ஜூலை 26ஆம் தேதி ஏ1 வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இதே தேதியில் தான் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியாக இருக்கிறது. மேலும் விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் திரைப்படமும் ஜூலை 26ஆம் தேதி வெளியாகவுள்ளதால், எதிர்பார்ப்பிலிருக்கும் மூன்று படங்களும் ஒரே நாளில் திரையரங்கிற்கு வருகை தருகின்றன.

ஏ 1 படத்தில் சந்தானத்துடன் தாரா அலிஷா, மொட்ட ராஜேந்திரன், சாய்குமார், எம்.எஸ்.பாஸ்கர், உள்பட பலர் நடித்துள்ளளர். நாளைய இயக்குநரில் கவனம் ஈர்த்த ஜான்சன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon