மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 18 செப் 2019

எழுவர் விடுதலை: தமிழக அரசு பதில்!

எழுவர் விடுதலை: தமிழக அரசு பதில்!

எழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்ட பாதுகாப்பு உள்ளதால் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுவிக்க ஆளுநருக்குத் தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு இறுதியில் பரிந்துரை செய்தது.

இந்நிலையில் நளினி சார்பில், எழுவரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து எட்டு மாதங்கள் ஆகியும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (ஜூலை 12) நீதிபதிகள், சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினி தரப்பில், அரசியல் சாசன அதிகாரம் கொண்ட ஆளுநர் அமைச்சரவை பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்குச் சட்ட பாதுகாப்பு இருந்தாலும், அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால், எழுவரும் சட்டவிரோதமாக காவலில் இருப்பதாகவே கருதமுடியும் என்று வாதிடப்பட்டது.

அப்போது அரசு தரப்பில், “எழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை ஆளுநர் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது. ஆளுநருக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon