மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜூலை 2019

நீட் தேர்வுக்கு திமுக காரணமா?: ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு திமுக காரணமா?: ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு திமுகவும் காங்கிரஸும்தான் காரணம் என முதல்வர் கூறியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்த 2010ஆம் ஆண்டில்தான் இந்த நீட் தேர்வு குறித்த நோட்டிபிகேஷன் விடப்பட்டது. இதற்கு காரணமே காங்கிரஸும் திமுகவும்தான். மக்களிடம் எதிர்ப்பு வந்தவுடன் அந்த பழியை எங்கள் மீது சுமத்துவதற்காக குற்றச்சாட்டை திசைதிருப்பிவிடுகின்றனர்” என்று தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து இன்று (ஜூலை 12) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் பழனிச்சாமி, பச்சைப் பொய் ஒன்றை கொஞ்சமும் கூசாமல் திரும்பத் திரும்பச் சொல்லி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வை முதலில் எதிர்த்தது அப்போதைய முதல்வர் கலைஞர்தான் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “கூட்டணியில் இருந்தாலும் உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்ததோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நீட் தேர்வுக்கு தடையும் பெற்றார். திமுக ஆட்சி இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையவில்லை. அது மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்த போதே நீட் தேர்வை ரத்து செய்து உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது” என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் பாஜக ஆட்சியும் இருந்த போதுதான் நீட் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட அந்த வழக்கில் முழு விசாரணை நடைபெறும் முன்பே, நீட் தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டு நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், நீட் தேர்வைத் தடுத்து நிறுத்த முடியாமல் மத்திய பாஜக அரசுக்கு அடி பணிந்து அதிமுக ஆட்சி இன்றுவரை தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், “நீட் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட பிறகும் 21 மாதங்கள் அதை மறைத்து அரசியல் சட்டப் பிரிவில் “வித்ஹெல்டு” என்ற வார்த்தையின் அர்த்தம் கூடத் தெரியாமல் சட்டமன்றத்திற்குத் தவறான தகவலைத் தந்து கொண்டிருப்பதும் அதிமுக அமைச்சர்களும், முதலமைச்சரும்தான்” என்றும், தேர்தல் அறிக்கையிலேயே நீட் தேர்வு குறித்து பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியதும் அதிமுகதான் எனவும் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க, திமுக மீது மீண்டும் மீண்டும் பழி போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தனது அறிக்கையில் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வெள்ளி 12 ஜூலை 2019