மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜூலை 2019

முதலீடுகளை ஈர்க்கும் பட்ஜெட்: நிர்மலா

முதலீடுகளை ஈர்க்கும் பட்ஜெட்: நிர்மலா

நிதி ஒருங்கிணைப்பில் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் முதலீடுகளை அதிகமாக ஈர்க்கும் பட்ஜெட்டாக 2019-20 மத்திய பட்ஜெட் இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2019-20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பொதுமக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான அம்சங்கள் எதுவும் இல்லை என்று விமர்சிக்கப்பட்டது. மேலும், முதலீட்டையும் சேமிப்புகளையும் ஊக்குவிக்க எவ்வித வழிமுறைகளும் பட்ஜெட்டில் இல்லை எனவும், ஒட்டுமொத்த வருவாய், செலவினம், நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட பொருளாதார விவரங்கள் பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை எனவும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டானது அதிக முதலீடுகளை ஈர்க்கும் அம்சங்களைக் கொண்டிருப்பதாகவும், இதனால் அரசின் நிதியாதாரங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜூலை 12ஆம் தேதி மாநிலங்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், “நிதி ஒருங்கிணைப்பில் இந்தியாவின் இலக்கை நோக்கிய பயணத்தில் பட்ஜெட் அம்சங்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் மதிப்புடைய பொருளாதாரமாக மாற்றுவதற்கான இலக்கு இந்த பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

முதலீடுகளை ஈர்க்கும் திட்டம் குறித்துப் பேசிய நிர்மலா, “அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களில் உள்ள விதிமுறைகளைத் தளர்த்தி இத்துறையைத் தாராளமயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரூ.400 கோடி விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கான கார்பரேட் வரியைக் குறைப்பது, எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கச் சலுகைகள் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் வாயிலாக முதலீடுகள் அதிகளவில் ஈர்க்கப்படும். உள்கட்டுமானத் துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வெள்ளி 12 ஜூலை 2019