மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜூலை 2019

நரிபேருல ஓட்டேரி நரிபேருல எழுதுங்கோ: அப்டேட் குமாரு!

நரிபேருல ஓட்டேரி நரிபேருல எழுதுங்கோ: அப்டேட் குமாரு!

இந்தியா தோத்த துக்கத்துல இருந்த நம்ம பசங்க, நேத்து இங்கிலாந்து ஜெயிச்ச உடனே சந்தோஷமா கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. அப்பிடி என்ன தான் ஆஸ்திரேலியா மேல கோவமோனு கேட்டா, ‘வந்து போகுமா இல்லையானு’ பழைய ரிக்கார்ட்ஸ் எல்லாம் எடுத்துக்காட்டுரானுக. சரி, நம்ம உள்ளூர் ஆட்டத்துக்கு வருவோம்னு வந்து பாத்தா, நல்ல வேளையா இன்னைக்கு காலைல ஜோலார்ட்பேட்டைல இருந்து தண்ணி வந்திருச்சு. அப்பாடா!! வாழைத்தோரணம், மலர் அலங்காரத்தோட வண்டி வில்லிவாக்கம் வந்தா சட்டப்பேரவைக்கு போன அமைச்சர் வேலுமணி வர தாமதம்னு அப்டேட் தராங்க. மக்கள் தண்ணீருக்காக காத்திருக்க, தண்ணீர் அமைச்சுருக்காக காத்திருக்க, அமைச்சர் சட்டப்பேரவை முடிவதற்காக காத்திருக்க...சட்டப்பேரவைல என்னடா பேசினாங்கனு கேட்டா, தண்ணிப் பிரச்சனையாம். அட போங்கடா!! ராசியப்பன் பாத்திரக்கடைல நான் போயி நியிசிலாந்து பேர்ல ஒன்னு அடிச்சுட்டு வரேன். நீங்க அப்டேட்டை பாருங்க..

ச ப் பா ணி

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2.50 லட்சம் லிட்டர் குடிநீருடன் புறப்படுகிறது ரயில்

தண்ணீரை வானத்திலிருந்து எதிர்பார்க்காதே;

வேலூரிலிருந்து எதிர்பார்.

புத்தன்

"சோற்றுக்கு வரும் நாயிடம் யார் போய் சொல்வது வீடு மாற்றுவதை" ~ நா.முத்துக்குமார்.

HBDNaMuthukumar

ஆதித்தன்

‏நான் ஏன் நல்லவனில்லை

என்பதற்கு மூன்று காரணங்கள்.

ஒன்று

நான் கவிதை எழுதுகிறேன்.

இரண்டு

அதைக் கிழிக்காமலிருக்கிறேன்.

மூன்று

உங்களிடம் அதைப்

படிக்கக் கொடுக்கிறேன்

HBDநாமு

எனக்கொரு டவுட்டு

‏கூவம், அடையாறு நதிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க புதிய திட்டம்- முதல்வர் அறிவிப்பு# டேக் டைவர்சன் போர்டு வைக்க போறீங்களா..!

செந்திலின்_கிறுக்கல்கள்

புடுங்குனது புல்லா தேவையில்லாத ஆணி தான் என்பது வாழ்க்கை முடியும் பொழுது தான் புரிகிறது!

மெத்த வீட்டான்

ஜனநாயகம் சர்வாதிகாரம் இது இரண்டுக்கும் நடுவுல ஒன்றை கண்டுபிடிச்சு அடிச்சு ஆடிட்டு இருக்கு பிஜேபி

கர்நாடகாவில் !

புத்திகாலி

10 ரூபாய் எருமைச் சாணிய விளம்பரம் பண்ணுனா, 100 ரூபாய்க்கு விற்கலாம்.. அந்த விளம்பரத்துல நடிகையவோ குழந்தைகளையோ நடிக்க வெச்சு, அன்பு, பண்பு, பாசம், நேசம்னு அஞ்சாறு பிட்ட சேர்த்துட்டா 200 ரூபாய்க்கும் விற்கலாம்!

Troll Mafias

தலைகீழா நின்னாலும் தமிழ்நாட்டில் தாமரை மலராதுயா...

இவ்வளவு அடிச்சி சொல்றீங்களே நீங்க ஆன்டி இந்தியனா..

அட இல்லப்பா நான் தான் தமிழிசை மகன்..

உயிரெழுத்து

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது குடிநீர் ரயில்.

சேமிக்கலனா எல்லாத்தையும் இனிமே இப்படித்தான் வாங்கனும்.

ஜோக்கர்

போட்டியின்றி மாநிலங்களவை எம்பி ஆனார் அன்புமணி ~ செய்தி

அதுக்கு அர்த்தம், யாரும் போட்டி போடாத தாலதான் எம்பி ஆனார்ன்னு சொல்லுங்க.

பிச்சைக்காரன்

கடவுளாய் இருப்பது எவ்வளவு கஷ்டம் !! வலியில் பிரார்த்திக்கும் பாம்பு .. உணவுக்கு பிரார்த்திக்கும் கழுகு.. ,எப்படியும் ஒன்றின் கோபமும் கண்ணீரும் உறுதி

கானா பிரபா

புதுச்சீலாந்து??

ஆண்டவா தமிழைக் காப்பாத்து

எனக்கொரு டவுட்டு

‏மக்களைத் தேடி அரசு" என்ற திட்டம் ரூ.90 கோடியில் செயல்படுத்தப்படும் -முதலமைச்சர்# அப்றம் அந்த 90கோடி எங்கேன்னு தனிப்படை அமைக்கணும்..!

-லாக் ஆஃப்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்


சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வெள்ளி 12 ஜூலை 2019