மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

வேலூரில் 3 கிலோ தங்கம் பறிமுதல்!

வேலூரில் 3 கிலோ தங்கம் பறிமுதல்!

வேலூரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று (ஜூலை 12) பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் 3கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வேலூரில் வரும் 5 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரம் செயல்படும் வகையில் சுழற்சி முறையில் 3 குழுக்கள் வீதம் 18 பறக்கும் படை, 18 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு சோதனை நடப்படுகிறது.

ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் உரிய ஆவணம் இன்றி ரொக்க பணம், தங்க நகைகள் மற்றும் பொருட்களை எடுத்து செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வேலூரில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

வாணியம்பாடி திருப்பத்தூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும்போது, அப்பகுதியில் வந்த கார் ஒன்றை சோதனையிட்டதில் 3 கிலோ 250 கிராம் தங்கம் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்டது தெரியவந்துள்ளது. அதன் மதிப்பு ரூ.90 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த நபர் வாணியம்பாடியைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது. நகை செய்து கொடுக்கும் தொழில் செய்து வரும் அவர் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு டெலிவரி செய்வதற்காக நகைகளை எடுத்துச் செல்லும் போது அதனைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணம் இல்லாததால் அதனைப் பறிமுதல் செய்து வாணியம்பாடி சார்புநிலை கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon